Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.2 ஒளியின் அழைப்பு
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.2 ஒளியின் அழைப்பு
கற்பவை கற்றபின்
Question 1.
முயற்சி, நம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை உணர்த்தும் அறிஞரின் பொன்மொழிகளைத் தொகுக்க.
Answer:
1. “நாம் நம்மால் முடியாது
என்று நினைக்கும் செயல்களை
யாரோ ஒருவர்
எங்கோ ஓர் இடத்தில்
அதை செய்து கொண்டுதான்
இருக்கிறார் என்பதை மறவாதே”
– அப்துல் கலாம்
2. எனது வெற்றிகளின் மூலம்
என்னை மதிப்பிடாதீர்கள்,
எத்தனை முறை நான் கீழே
விழுந்து மீண்டும் எழுந்தேன்
என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்
– நெல்சன் மண்டேலா
3. கண்ணெதிரே காணும்
ஒவ்வொருவரையும் நம்புவது
அபாயகரமானது. அதைக் காட்டிலும்
ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும்
அபாயகரமானது
– ஆபிரகாம் லிங்கன்
4. முடியாது என்பது நம்
அகராதியில் கிடையாது
– நெப்போலியன்
5. நம்பிக்கையோடு – உன்
முதலடியை – எடுத்துவை
முழுப் படிக்கட்டையும்
நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை,
முதலில் படியில் ஏறு
– மார்டின் லூதர்கிங்
6. ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட
வேண்டும் என்ற முயற்சிதான்
உலகில் பல பெருந்துயருக்கும்
காரணமாயிருக்கிறது.
– சாமுவேல் பட்லர்
7. எவராவது தான் தன்னுடைய
வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை
என்று நினைத்தால் அவர்கள் தாம்
தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச்
செய்து பார்த்ததில்லை என்று பொருள்
– ஐன்ஸ்டைன்
Question 2.
“தன்னம்பிக்கையின் மறுபெயர்” நான் என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
தன்னம்பிக்கையின் மறுபெயர் நான்
என் மறுபெயர்
என்ன தெரியுமா?…
பொறுமையுடன்
தன்னம்பிக்கை…
எனக்குள் ஒருவன் இருக்கிறான்
அவன்தான் தன்னம்பிக்கை…
முயன்றவரை மட்டுமல்ல
முடியும் வரை முயல்வேன்
துவண்டு போக மாட்டேன்
துணிவுடன் செல்வேன்…
வேகமாய் செல்லமாட்டேன் விவேகத்துடன்
செல்வேன்
பொறாமைகளை போட்டிகளை எதிர்கொள்ள
பொறுப்புடன் ஓடுவேன்
ஏனெனில்
என் பெயர் தன்னம்பிக்கை….
தோல்வியில் சிரித்துப் பார்த்தேன்…
கற்றதை உணர்ந்து பார்த்தேன்…
ஆசையைத் துறந்து பார்த்தேன்…
அச்சத்தை மறந்து பார்த்தேன்…..
வியர்வை சொட்ட உழைக்கப் பார்த்தேன்…
வெற்றிக்கனியைச் சுவைத்துப் பார்க்கிறேன்.
என் பெயர் தன்னம்பிக்கை…
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
“முண்டி மோதும் துணிவே இன்பம்” – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது………………….
அ) மகிழ்ச்சி
ஆ) வியப்பு
இ) துணிவு
ஈ) மருட்சி
Answer:
இ) துணிவு
குறுவினா
Question 1.
கமுகு மரம் எதைத் தேடியது?
Answer:
பெருமரங்களுக்கு இடையே தோன்றிய கமுகு மரமானது, தான் வளர்ந்து வளம் பெறுவதற்கு, விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் (ஒளியமுதை) தேடியது.
நெடுவினா
Question 1.
வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாக ஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?
Answer:
முன்னுரை:
போட்டி இன்றி வாழ்க்கை இல்லை. வலிகளின்றி வெற்றி இல்லை. ஒன்றையொன்று அடுத்தும், படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று வாழ்க்கைக்கும் தான் என்பதை ந. பிச்சமூர்த்தி அவர்கள் கமுகுமரம் வாயிலாக உணர்த்துகிறார்.
கமுகு பிறந்த இடம்:
அடர்ந்த இருள் போன்ற நிழல் பரப்புகின்ற பெருமரங்களின் இடையே கமுகு பிறந்தது. பெருமரங்களின் நிழல் என்னும் இருள் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியமுதைத் தடுத்தது. பெருமரங்களின் நிழலை வெறுத்த கமுகு தான் வளரத் தேவையான ஒளியமுதைப் பெற்று உயிர்ப்புப் பெற போராட துவங்கியது.
கமுகின் போராட்டம்:
கமுகு மரம் கடுமையாகப் பெருமரங்களுடன் முட்டிமோதும் முயற்சியைத் தொடங்கியது. விண்ணிலிருந்து வரும் தன் உயிர்ப்பாகிய ஒளியமுதைத் தேடியது. மீண்டும், மீண்டும் உயர முயற்சித்தது. கதிரவனின் ஒளிக்கதிர்களாகிய விரல்களின் அழைப்பைக் கண்டது. பெருமரங்களின் இருட்டில் இருந்து கொண்டே தன் கிளையை வளைத்து ஒளியை நோக்கி நீட்டத் தொடங்கியது; வளர்ந்தது. பெரு மரங்களை முட்டி மோதும் துணிச்சலையும், முயற்சியையும் பெற்றதால் கமுகு வளைந்து, நெளிந்து, நீண்டு வளர்ந்தது. மலர்ச்சி பெற்றது.
வாழ்க்கைப் போர்:
வாழ்க்கையிலும் இருள் போன்ற நிழல் சூழ்ந்த நிலைகள் ஏற்படலாம். ஒளியமுதை நம்பி, வேண்டி, கமுகு துணிச்சலான முயற்சியில் ஈடுபட்டது போல, நாமும் வாழ்க்கைப் போரில் நம்பிக்கை தன்முனைப்பு, விடாமுயற்சி, உடையவர்களாய் இருந்தால் வாழ்வு மலர்ச்சி பெறும்.
முடிவுரை:
“பெருமரத்துடன் சிறுகமுகு போட்டியிடுகின்றது, அதுவே வாழ்க்கைப் போர். முண்டி போதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி”. இயற்கையின் போராட்டங்களையும், வாழ்வின் அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் வாழ்க்கைப் போரைச் சந்திப்போம்; முயல்வோம்; வெற்றி பெறுவோம்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
பொருத்துக.
Answer:
Question 2.
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) மீரா
ஈ) ந.பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந.பிச்சமூர்த்தி
Question 3.
ந.பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை எது?
அ) சயன்ஸுக்கு பழி
ஆ) சயன்ஸுக்கு பலி
இ) அறிவியல் உலகம்
ஈ) அறிவியல் விருந்து
Answer:
ஆ) சயன்ஸுக்கு பலி
Question 4.
பிச்சை, ரேவதி என்ற புனைபெயர்களில் படைப்புகளை எழுதியவர் யார்?
அ) கண்ண தாசன்
ஆ) மீரா
இ) தாராபாரதி
ஈ) ந.பிச்சமூர்த்தி
Answer:
ஈ) ந.பிச்சமூர்த்தி
Question 5.
கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……………
அ) 1932
ஆ) 1933
இ) 1934
ஈ) 1935
Answer:
அ) 1932
Question 6.
யாப்புப்பிடியில் இருந்து விடுபட்டவையே …………… ஆகும்.
அ) மரபுக் கவிதை
ஆ) சங்கப் பாடல்
இ) காப்பியம்
ஈ) புதுக்கவிதை
Answer:
ஈ) புதுக்கவிதை
Question 7.
ஒளியமுது என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ) உவமைத் தொகை
ஆ) வினைத் தொகை
இ) உருவகம்
ஈ) எண்ணும்மை
Answer:
இ) உருவகம்
Question 8.
உயிரின் முயற்சியே வாழ்வின் …………….
அ) தளர்வு
ஆ) தடுமாற்றம்
இ) மனமாற்றம்
ஈ) மலர்ச்சி
Answer:
ஈ) மலர்ச்சி
Question 9.
“புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ……………
அ) நெல்லைக்கண்ணன்
ஆ)வல்லிக்கண்ணன்
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ) ந. பிச்சமூர்த்தி
Answer:
ஆ) வல்லிக்கண்ணன்
Question 10.
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ……….. ஆகும்
அ) ந. பிச்சமூர்த்தி
ஆ) மீரா
இ) வல்லிக்கண்ணன்
ஈ) மு. மேத்தா
Answer:
அ) ந.பிச்சமூர்த்தி
குறுவினா
Question 1.
ந.பிச்சமூர்த்தி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கூறுவன யாவை?
Answer:
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்று வல்லிக்கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
Question 2.
ந.பிச்சமூர்த்தி படைத்த இலக்கிய வகைமைகளைக் குறிப்பிடுக.
Answer:
- புதுக்கவிதை
- ஓரங்கநாடகங்கள்
- சிறுகதை
- கட்டுரைகள்
Question 3.
ந.பிச்சமூர்த்தி துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் யாவை?
Answer:
- ஹனுமான்
- நவ இந்தியா
Question 4.
புதுக்கவிதைக்குரிய வேறு பெயர்கள் யாவை?
Answer:
- இலகு கவிதை
- கட்டற்ற கவிதை
- விலங்குகள் இல்லாக் கவிதை
- கட்டுக்குள் அடங்காக் கவிதை
சிறுவினா
Question 1.
ந. பிச்சமூர்த்தி குறிப்பு வரைக.
Answer:
- புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.
- வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றினார்.
- புதுக்கவிதை, ஓரங்க நாடகம், கட்டுரை ஆகிய இலக்கிய வகைமைகளைப் படைத்தவர்.
- பிச்சை, ரேவதி ஆகிய புனைபெயர்களில் எழுதினார்.