Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.3 தாவோ தொ ஜிங்
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.3 தாவோ தொ ஜிங்
கற்பவை கற்றபின்
Question 1.
நீங்கள் அறிந்த அயல்நாட்டு தத்துவ அறிஞர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
- சாக்ரடீஸ்
- கார்ல்மார்க்ஸ்
- பிளேட்டோ
- லாவோட்சு
- அரிஸ்டாட்டில்
- டார்வின்
- கன்பூசியஸ்
Question 2.
ஜென் தத்துவக்கதை ஒன்றைப் படித்து அதுகுறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
படித்த கதை : ‘இந்தாப்பா உன் சந்தோஷம்’
கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், மாலா, கமலா, குமார்.
ஆசிரியர் : கதையைக் கேட்டீர்களா மாணவர்களே …
மாலா : கேட்டோம் ஐயா!
கமலா : ஐயா! சந்தோஷம் எதில் என்பதை இக்கதை விளக்கமாக கூறியுள்ளது.
ஆசிரியர் : என்ன புரிந்துகொண்டீர்கள்…
குமார் : கோடீஸ்வரனுக்கு பணம் இருந்தும் மகிழ்ச்சியில்லை. எப்போதும் தன் பொன்னையும் பொருளையும் எண்ணிக் கொண்டிருக்கிறான்…
ஆசிரியர் : நிம்மதிக்கு என்ன செய்தான்.
கமலா : நாடு நாடாக ஊர் ஊராக சுற்றினான். பணத்தின் நினைவு வரும்போதெல்லாம் பதறி அடித்து திரும்பிப் போகின்றான்.
மாலா : பின் பொருள், பொன், பணம், எல்லாவற்றையும் மூட்டை கட்டி துறவியிடம் கொடுத்து சந்தோசம் கேட்கிறான்.
குமார் : துறவி மூட்டையுடன் ஓடுகிறார். சந்து பொந்தெல்லாம் ஓடிய துறவி மீண்டும் மரத்தடிக்கு வருகிறார்.
கமலா : மூட்டையை அவசர அவசரமாக கோடீஸ்வரன் பறித்துக் கொள்கிறான்.
ஆசிரியர் : மாணவர்களே செல்வம் படைத்தவனுக்கு அதனைக் கைவிட மனம் வருவதில்லை. அதனால் நிம்மதியும் அமைதியும் பெற முடியவில்லை. பொன், பொருள் இருப்பினும் அதில் பற்றற்ற மனதுடன் இருப்பதே மகிழ்ச்சி தரும்.
Question 3.
மண் பாண்டம் செய்வோரைச் சந்தித்து அதன் உருவாக்கம் குறித்து அறிக.
Answer:
- • மண்பாண்டம் செய்யும் தொழில் பழமையான தொழில்களில் ஒன்று.
மண்பாண்டம்செய்பவர் குயவர் என்று அழைக்கப்பட்டனர். - நீர் தூய்மையாகப்பட்ட மண் சேர்த்துக் குழைக்கபட்ட களிமண்ணோடு வேறு சில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு.
- களிமண் கனமானது, அடர்த்தியானது, தூய்மையானது. இதனை நன்கு குழைத்து மேடையில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும்.
- பானை செய்பவர் தேவைப்படும் வேகத்தில் சுழல் மேடையை சுழற்றுவார்.
- சுழற்றும் வேகத்தில் கீழ்நோக்கியும் உள்நோக்கியும் அழுத்தி ஒரே அளவிலான தடிமனில் பரவவிட்டு என்ன வடிவில் வேண்டுமோ! அவ்வடிவில் வடிவமைத்து, ஈரம் உலர்ந்தவுடன் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூளையில் சூடாக்கி மண்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
Answer:
அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
குறுவினா
Question 1.
தாவோ தே ஜிங் ‘இன்னொரு பக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகின்றார்?
Answer:
- இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளை உடையது மானுட வாழ்க்கை. இருக்கின்றதான உருப்பொருளையே பயன் உடையதாய்க் கருதுகிறோம்.
- புலப்படாத இன்னொரு பக்கமாகிய இருத்தலின்மையை நாம் உணராமலே
- பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
சான்று : உருப்பொருளாகிய மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் இருத்தல், அதனுள் இருக்கும் இன்மையாகிய வெற்றிடத்தையே நீர் முதலியவற்றை நிரப்பிக் கொள்ள பயன்படுத்துகிறோம். எனவே இருத்தல் மட்டுமல்ல “இருத்தலின்மையும்” வாழ்வின் இன்னொரு பக்கம் என்று தாவோ தே ஜிங் கூறுகிறார்.
சிறுவினா
Question 1.
பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக.
Answer:
- வான்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவி கம்பர் “கம்பராமாயணம்” எழுதினார்.
- வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி, ‘வில்லிபாரதம்’, ‘பாஞ்சாலி சபதம் எழுதப்பட்டது.
- ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி “சீவகசிந்தாமணி” எழுதப்பட்டது.
- Pilgrims progress நூலைத் தழுவி “இரட்சண்ய யாத்திரிகம் எழுதப்பட்டது.
- The secret way – என்னும் நூலைத் தழுவி” மனோன்மணியம்” எழுதப்பட்டது.
- புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம் என்னும் நூலைத் தழுவி “யசோதர காவியம்” எழுதப்பட்டது.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
லாவோட்சு வாழ்ந்த காலம் எது?
அ) கி.மு. முதலாம் நூற்றாண்டு
ஆ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
இ) கி.பி. முதலாம் நூற்றாண்டு
ஈ) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
Answer:
ஆ) கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
Question 2.
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி யார்?
அ) யுவான்சுவாங்
ஆ) பாகியான்
இ) தாவோதே ஜிங்
ஈ) கன்பூசியஸ்
Answer:
ஈ) கன்பூசியஸ்
Question 3.
லாவோட்சின் சிந்தனை …………. எனப்படும்.
அ) லாவோட்சின் பக்கம்
ஆ) தாகாவியம்
இ) தாவோவியம்
ஈ) லாவோட்சும் சினமும்
Answer:
இ) தாவோவியம்
Question 4.
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றவர் யார்?
அ) கன்பூசியஸ்
ஆ) யுவான்சுவாங்
இ) லாவோட்சு
ஈ) தாவோட்சு
Answer:
இ) லாவோட்சு
Question 5.
…………… மையமாக வைத்துக் கன்பூசியஸ் சிந்தித்தார்.
அ) ஒழுக்கத்தை
ஆ) அன்பை
இ) பகுத்தறிவை
ஈ) உறவை
Answer:
அ) ஒழுக்கத்தை
Question 6.
தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர் ………………
அ) சி.மணி
ஆ) கவிமணி
இ) ந.பிச்சமூர்த்தி
ஈ) வல்லிக்கண்ணன்
Answer:
அ) சி.மணி
குறுவினா
Question 1.
லாவோட்சு – குறிப்பு வரைக.
Answer:
- லாவோட்சு, சீனாவில் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்.
- சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் இவரது சமகாலத்தவர்.
- ‘தாவோவியம்’ என்ற சிந்தனைப் பிரிவைச் சார்ந்தவர்.
Question 2.
சுவரின் வெற்றிடமாக விளங்குவன யாவை?
Answer:
வீட்டிலுள்ள சாளரமும் கதவும் கூடச் சுவரின் வெற்றிடமாகத் திகழ்கின்றன.
Question 3.
வாழ்க்கையின் இருநிலைகள் எனப்படுவது யாது?
Answer:
- இருப்பதும்
- இல்லாதிருப்பதும்
Question 4.
சீனச் சிந்தனையின் பொற்காலம் எனப்படுவது எது?
Answer:
லாவோட்சு, கன்பூசியஸ் வாழ்ந்த காலம்.
சிறுவினா
Question 1.
நம் வாழ்க்கையை எவ்வாறு பொருளுடையதாக்க வேண்டும்?
Answer:
வாழ்க்கை மிகவும் விரிவானது. அதன் சில பகுதிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். உணர்கிறோம். நாம் பயன்படுத்தாத அந்தப் பகுதிகளும் சுவை மிகுந்தவை. பொருள் பொதிந்தவை. வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் சுவைத்து, நம் வாழ்க்கையைப் பொருளுடையதாக்குவோம்.
Question 2.
இன்மையால்தான் நாம் பயனடைகிறோம் என்ற கவிஞரின் கருத்தை எடுத்தியம்புக.
Answer:
- இல்லை என்பது வடிவத்தை வரையறை செய்கிறது.
- குடம் செய்ய மண் என்பது உண்டு. இந்த உண்டும் இல்லையும் சேர்வதால்தான் குடத்தில் நீரை நிரப்ப முடியும். வெற்றிடம் இல்லாத குடத்தில் நீரை நிரப்ப முடியாது.
- ஆரங்களை விட நடுவிலுள்ள வெற்றிடம் சக்கரம் சுழல உதவுகிறது.
- குடத்து ஓட்டினைவிட உள்ளே இருக்கும் வெற்றிடமே பயன்படுகிறது.
- சுவர்களைவிட வெற்றிடமாக இருக்கும் இடமே பயன்படுகிறது.
- ஆகவே, ‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்று கவிஞர் கூறுகிறார்.
பாடலின் பொருள்:
- பல ஆரங்களைக் கொண்டது சக்கரம். எனினும் அவற்றிடையே உள்ள வெற்றிடத்தை மையமாகக் கொண்டே அச்சக்கரம் சுழல்கிறது. மண்ணினால் அழகிய வேலைப்பாடுகள் கொண்டதாய் இருப்பது பானை. ஆயினும் பானையினுள் இருக்கும் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
- வீட்டில் உள்ள சன்னலும் கதவும் கூட சுவரின் வெற்றிடம்தான். அதுவே காற்றையும், வெளிச்சத்தையும் தரப் பயன்படுகிறது.
- நான்கு சுவர்களுக்கும் இடையே உள்ள வெற்றிடம்தான், அறையாக நமக்குப் பயன்படுகிறது.
- நம் பார்வையில் படுகின்ற உருப்பொருள்கள் உண்மைதான் எனினும் உருப்பொருளின் உள் உள்ள வெற்றிடமே நமக்குப் பயன் உடையதாகிறது.
- வெற்றிடமும் பயன்தரும். இல்லை யென்றிருப்பதும் உள்ளதாய் மாறும். வெற்றிடமே பயன் உடையதாகும் எனில் வாழ்வில் வெற்றி பெற இருத்தலையும் பயன்படுத்துவோம் இருத்தலின்மையையும் பயன்படுத்துவோம்.
- வாழ்வில் நாம் பயன்படுத்தாத பகுதிகள் பல உண்டு. அவற்றை வெற்றிடம் என்று ஒதுக்கி விடுகிறோம். நாம் பயன்படுத்தாத நம் வாழ்வின் வெற்றிடமான பகுதிகளும், சுவை மிகுந்தவை பொருள் பொதிந்தவை. எனவே வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் சுவைத்து நம் வாழ்வை பொருளுடையதாக்குவோம்.