Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 8.4 யசோதர காவியம்
Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 8.4 யசோதர காவியம்
கற்பவை கற்றபின்
Question 1.
தொடர்களை ஒப்பிட்டுக் கருத்துகளை வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
அறம் செய விரும்பு : ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக.
ஆறுவது சினம் : போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக.
ஆசிரியர் : ஆசிரியர் : நாம் இப்போது கற்ற ஆக்குவது ஏதெனில்… என்னும் அடிக்கு இணையான தொடர் ஏதாவது நினைவு வருகிறதா குழந்தைகளே…
கலா : ஐயா எனக்கு ஒரு தொடர் ஞாபகம் வருகிறது சொல்லட்டுமா ஐயா.
ஆசிரியர் : சொல்லு கலா…
கலா : ஔவையார் கூறிய “அறம் செய விரும்பு” ஐயா…..
ஆசிரியர் : மிகவும் சரியாகச் சொன்னாய் கலா.
மாலா : அய்யா கலா கூறியதும் நீங்கள் நடத்தியதும் ஒரே கருத்தா ஐயா….
ஆசிரியர் : ஆமாம். மாலா ஔவையார் “நீ எச்செயலைச் செய்ய விரும்பினாலும் அது அறம் செய்வதாக இருத்தல் வேண்டும் என்று விரும்பு” என்கிறார்…..
கலா : இரண்டாவது தொடர் ஐயா…
ஆசிரியர் : ஆறுவது சினம் – வெகுளி போக்குக. ஔவையார் மனதை சிறிது நேரம் அமைதியாக கட்டுப்படுத்தினால் தானாகவே சினம் ஆறி விடும் என்று உணர்த்துகிறார். யசோதர காவியம் “சினத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் விதமாக “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்று கூறுகிறது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
“ஞானம்” என்பதன் பொருள் யாது?
அ) தானம்
ஆ) தெளிவு
இ) சினம்
ஈ) அறிவு
Answer:
ஈ) அறிவு
குறுவினா
Question 1.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
Answer:
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன், அவந்தி நாட்டு மன்னனாகிய “யசோதரன்” ஆவார்.
சிறுவினா
Question 1.
நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?
Answer:
- • நாம் செய்கின்ற செயல்கள் பிறருக்குப் பயன்தரத்தக்கச் செயலாக இருத்தல் வேண்டும்.
- “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக”. நம்மிடம் உள்ள தீய நெறிகளை, பண்புகளை நீக்க விரும்பினால் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
- “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக”.
மெய்யறிவு நூல்களை ஆராய்ந்து ஞானம் பெற வேண்டும். - “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக”.
நாம் மேற்கொண்ட நற்செயல்களாகிய விரதத்தைக் காக்க வேண்டும். . - “காக்குவது ஏதெனில் விரதம்”
என்று நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை யசோதர காவியம் கூறுகிறது.
Question 2.
யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.
Answer:
அறத்தை ஆக்குக:
பின்னாளில் செய்யலாம் என்று எண்ணாது அறஞ் செய்க என்று (36வது) குறள் கூறுகிறது.
“அன்றறிவாம் எண்ணாது அறஞ்செய்து மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
வெகுளி போக்குக:
யாரிடத்தும் கோபம் கொள்ளாமல் சினத்தை மறந்துவிட வேண்டும் என்று (குறள் 303) கூறுகிறது.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்”.
ஞானம் நோக்குக:
குற்றமில்லாத அறிவைக் கண்டவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் கிட்டும் என்று (குறள் 352) கூறுகிறது.
“இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு”.
விரதம் காக்க:
விரதம் என்றால் நன்னெறி. தீய செயல்கள் தீயைப் போல் தீமைதரும், எனவே கொடிதான தீமையை விட்டு விலகி நன்னெறி பற்றுக என்று (202) குறள் கூறுகிறது.
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”.
இவையே யசோதர காவியமும் திருக்குறளும் குறிப்பிடும் வாழ்க்கை நெறிகள் ஆகும்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
அ) உதயகுமாரன்
ஆ) யசோதரன்
இ) சீவகன்
ஈ) சனகன்
Answer:
ஆ) யசோதரன்
Question 2.
யசோதரன் எந்நாட்டு மன்னன்?
அ) மாளவம்
ஆ) மகதம்
இ) கலிங்கம்
ஈ) அவந்தி
Answer:
ஈ) அவந்தி
Question 3.
யசோதர காவியத்தின் சருக்கங்கள் எத்தனை?
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) ஐந்து
Question 4.
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
அ) கலித்தொகை
ஆ) யரோதர காவியம்
இ) நன்னூல்
ஈ) புறநானூறு
Answer:
ஆ) யசோதர காவியம்
Question 5.
யசோதர காவியம் ……….. மொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
அ) வட
ஆ) கன்னட
இ) சிந்தி
ஈ) தெலுங்கு
Answer:
அ) வட
Question 6.
யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) ஐம்பெருங்காப்பியம்
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்
Answer:
ஈ) ஐஞ்சிறுகாப்பியம்
Question 7.
பொருத்துக.
Answer:
குறுவினா
Question 1.
யசோதர காவியம் – குறிப்பு வரைக.
Answer:
- ஐஞ்சிறு காப்பிங்களுள் ஒன்று.
- இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை
- இந்நூல் ‘யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
- 5 சுருக்கங்களைக் கொண்டது.
Question 2.
ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை?
Answer:
- நீலகேசி
- உதயண குமார காவியம்
- சூளாமணி
- நாககுமார காவியம்
- யசோதர காவியம்
பாடலின் பொருள்:
காக்க வேண்டிய நன்னெறிகள்
- நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்.
- நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.
- ஆராய வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
- இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால், தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.