Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.1 ஜெயகாந்தம் (நினைவு இதழ்)
கற்பவை கற்றபின்
Question 1.
வகுப்பு மாணவர்களின் படைப்புகளைத் திரட்டிக் குழுவாக இணைந்து கையெழுத்து இதழ் ஒன்றை உருவாக்குக.
Answer:
(மாணவர் செயல்பாடு)
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்……………………..
அ) ஜெயகாந்தன்
ஆ) ஜெயமோகன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) ஜெயகாந்தன்
Question 2.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்……………………..
அ) கங்கை எங்கே போகிறாள்
ஆ) யாருக்காக அழுதாள்
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
ஈ) இமயத்துக்கு அப்பால்
Answer:
இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
Question 3.
தர்மார்த்தங்களை உபதேசிக்கவே…………………….. பாரதத்தை எழுதியவர்.
அ) வியாசர்
ஆ) கம்பர்
இ) வில்லிபுத்தூரார்
ஈ) பாரதியார்
Answer:
அ) வியாசர்
Question 4.
“நாற்பொருட் பயத்தலொடு” – இதில் ‘நாற்பொருட்’ என்பது ……………………..
அ) அறம், மானம், கல்வி, புகழ்
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், மறம், மானம், புகழ்
ஈ) புகழ், கல்வி, வீரம், பெருமை
Answer:
ஆ) அறம், பொருள், இன்பம், வீடு
Question 5.
கலைப்பணி என்றாலே அதனுள் அடங்குவது……………………..
அ) மானுடம்
ஆ) சமூகப்பார்வை
இ) நன்னெறி
ஈ) நாட்டுப்பற்று
Answer:
ஆ) சமூகப்பார்வை
Question 6.
ஜெயகாந்தன் வாழ்ந்த காலம் ……………………..
அ) 1934-2015
ஆ) 1936-2016
இ) 1939-2017
ஈ) 1940-2018
Answer:
அ) 1934-2015
Question 7.
பிரெஞ்சு மொழியில் வந்த “காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல் எது?
அ) உண்மை சுடும்
ஆ) ஒரு கதாசிரியரின் கதை
இ) வாழ்விக்க வந்த காந்தி
ஈ) தேவன் வருவார்
Answer:
இ) வாழ்விக்க வந்த காந்தி
Question 8.
முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு ……………………..
அ) ஒரு கதாசிரியனின் கதை
ஆ) பிரளயம்
இ) இனிப்பும் கரிப்பும்
ஈ) யுகசந்தி
Answer:
அ) ஒரு கதாசிரியனின் கதை
Question 9.
“தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு – ……………………..
அ) ரிஷிமூலம்
ஆ) யுகசந்தி
இ) குருபீடம்
ஈ) ஒரு பிடி சோறு
Answer:
ஆ) யுகசந்தி
Question 10.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் ……………………..
அ) மேத்தா
ஆ) சுஜாதா
இ) ஜெயமோகன்
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஈ) ஜெயகாந்தன்
Question 11.
ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?
அ) கண்ண தாசன்
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) புலமைப்பித்தன்
ஈ) வாலி
Answer:
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Question 12.
சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்……………………..
அ) உன்னைப்போல் ஒருவன்
ஆ) இமயத்துக்கு அப்பால்
இ) புதிய வார்ப்புகள்
ஈ) ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்
Answer:
ஆ) இமயத்துக்கு அப்பால்
Question 13.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
Question 14.
சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர்
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன
Question 15.
உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது……………………..
அ) குடியரசுத்தலைவர் விருது
ஆ) சாகித்ய அகாதெமி விருது
இ) ஞானபீட விருது
ஈ) தாமரைத் திரு விருது
Answer:
அ) குடியரசுத்தலைவர் விருது
Question 16.
மாறுபட்ட குழுவினைத் தேர்வு செய்க.
அ) குருபீடம், யுகசந்தி
ஆ) ஒருபிடி சோறு, உண்மை சுடும்
இ) இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா
ஈ) பிரளயம், கைவிலங்கு
Answer:
ஈ) பிரளயம், கைவிலங்கு)
Question 17.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் சிறுகதைத் தொகுப்பினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
அ) குருபீடம்
Question 18.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தனின் குறும்புதினத்தைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப் போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஆ) பிரளயம்
Question 19.
கீழ்க்கண்டவற்றுள் ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூலினைக் கண்டறிக.
அ) குருபீடம்
ஆ) பிரளயம்
இ) பாரீசுக்குப்போ
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Answer:
ஈ) ஒரு கதாசிரியரின் கதை
Question 20.
பொருத்துக.
1. தேவன் வருவாரா – அ) குறும்புதினம்
2. சினிமாவுக்குப் போன சித்ததாளு – ஆ) சிறுகதைத் தொகுப்பு
3. சுந்தர காண்டம் – இ) மொழிபெயர்ப்பு
4. வாழ்விக்க வந்த காந்தி – ஈ) புதினம்
அ) 1.இ 2.அ 3.ஈ 4.ஆ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
Question 21.
ஜெயகாந்தனின் திரைப்படம் ஆகாத படைப்பு ஒன்று……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்
இ) ஒருபிடி சோறு
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) ஒருபிடி சோறு
Question 22.
சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
Question 23.
படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் ……………………..
அ) அகிலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) புதுமைப்பித்தன்
ஈ) கல்கி
Answer:
ஆ) ஜெயகாந்தன்
Question 24.
திரைப்படமான ஜெயகாந்தனின் குறும்புதினம் எது?
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
ஆ) யாருக்காக அழுதான்
Question 25.
ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்……………………..
அ) உன்னைப் போல் ஒருவன்
ஆ) யாருக்காக அழுதான்
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
ஈ) ஊருக்கு நூறு பேர்
Answer:
இ) சிலநேரங்களில் சில மனிதர்கள்
Question 26.
ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………………..
அ) 1972
ஆ) 1971
இ) 1975
ஈ) 1978
Answer:
அ) 1972
குறுவினா
Question 1.
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
Answer:
- குடியரசுத் தலைவர் விருது
- சாகித்திய அகாதெமி விருது
- சோவியத் நாட்டு விருது
- ஞானபீட விருது
- தாமரைத்திரு விருது – ஆகியவையாகும்.
Question 2.
ஜெயகாந்தன் என்ற தமிழனின் சிறந்த அடையாளங்கள் என்று கா. செல்லப்பன் குறிப்பிடுவது யாது?
Answer:
நேர்கொண்ட ஆனால் வித்தியாசமான பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள், திமிர்ந்த ஞானச் செருக்கு, கம்பீரமான குரல், வளமான, புதுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் இவையே ஜெயகாந்தனின் சிறந்த அடையாளங்கள்.
Question 3.
ஜெயகாந்தன் இயற்றிய குறும்புதினங்களுள் ஏதேனும் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:
- கைவிலங்கு
- ரிஷி மூலம்
- கருணையினால் அல்ல
- சினிமாவுக்குப் போன சித்தாளு
Question 4.
ஜெயகாந்தனின் இன்னொரு முகம் கவிஞன் – என்பதற்குச் சான்று தருக.
Answer:
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி கவிதை எழுதியதே, ஜெயகாந்தன் ஒரு கவிஞர் என்பதற்குச் சான்றாகும்.
“எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்
பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்.”
Question 5.
ஜெயகாந்தனின் சாதனையாக தீபம் இதழ் வாசகர்கள் கூறியது யாது?
Answer:
சிறுகதைகளில் பலதிறப்பட்ட சூழ்நிலைகளையும் புதிய கருத்துகளையும் வெற்றிகரமாக சித்தரிப்பது ஜெயகாந்தனின் அரிய சாதனை என்று பாராட்டுகின்றனர்.
Question 6.
திரைப்படமான ஜெயகாந்தனின் படைப்புகள் யாவை?
Answer:
- சில நேரங்களில் சில மனிதர்கள்.
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
- உன்னைப்போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர்.
- யாருக்காக அழுதான் – ஆகியவையாகும்.
Question 7.
‘பாயிரந் தோன்றி மும்மை யினொன்றாய்’ – இவ்வடிகளில் உள்ள ‘மும்மை’ எவை?
Answer:
- இறப்பு
- நிகழ்வு
- எதிர்வு
Question 8.
ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் சிலவற்றை எழுதுக.
Answer:
- குருபீடம்
- இனிப்பும் கரிப்பும்
- யுகசந்தி
- தேவன் வருவாரா
- ஒருபிடி சோறு
- புதிய வார்ப்புகள்
- உண்மை சுடும்
Question 9.
ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை?
Answer:
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை.
Question 10.
‘பண்ணொடு சந்தமும் பாய்ந்து வரும் – ஏழை
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்’ – என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:
- ஜெயகாந்தன்
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல்.
Question 11.
‘எண்ணும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்’ என்ற பாடலடியைப் பாடியவர் யார்? எவரைப் பற்றிய பாடல் இது?
Answer:
- ஜெயகாந்தன்.
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றியது இப்பாடல் பாடினார்.
Question 12.
ஜெயகாந்தன் பார்வையில் சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனை எது? மிகப்பெரிய சவால் எது?
Answer:
- மகத்தான சாதனை: பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்,
- அதுவே மிகப்பெரிய சவால் என்கிறார் ஜெயகாந்தன்.
Question 13.
இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது? என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம், நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.
சிறுவினா
Question 1.
ஜெயகாந்தனின் புகழ்பெற்ற புதினங்கள் யாவை?
Answer:
- பாரீசுக்குப் போ!
- சுந்தரகாண்டம்
- உன்னைப்போல் ஒருவன்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
- கங்கை எங்கே போகிறாள்
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
- இன்னும் ஒரு பெண்ணின் கதை
Question 2.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் விளக்கமளிக்கிறார்?
Answer:
- நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.
- முழுக்க முழுக்க வாழ்க்கையில் இருந்து நான் பெறும் கல்வியின், முயற்சியின் பயனை வெளிப்படுத்த எழுதுகிறேன்.
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவும் எழுதுகிறேன்.
- கலாதேவியின் (கலை) காதல் கணவனாக இருப்பதாலும், சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாக இருப்பதாலும் எழுதுகிறேன். – என்று ஜெயகாந்தன் விளக்கம் அளிக்கிறார்.
Question 3.
நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுவது யாது?
Answer:
“நூலினியல்பே நுவலின் ஓரிரு
பாயிரந் தோற்றி மும்மை யினொன்றாய்
நாற்பொருட் பயத்தலொடு எழுமதந் தழுவி”
என்று நூலின் இயல்பாகத் தமிழ் இலக்கணம் கூறுகிறது.
Question 4.
நாற்பொருள் பயத்தல் – என்பது எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:
- நூல் என்பது நாற்பொருள் தருவதாய், பயனுடையதாய் இருத்தல் வேண்டும்.
- அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாற்பொருள் ஆகும்.
Question 5.
முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
Answer:
எழுத்தாளர், ஒருவருடைய படைப்பு நோக்கத்தையும் படைப்பு பாங்கையும் வாழ்க்கைச் சிக்கல்கள் குறித்த கண்ணோட்டத்தையும் உணர்த்துவதுதான் முன்னுரை.
தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரைகள் எழுதிக்கொள்ளும் ஜெயகாந்தன், பின்னர் வரவிருக்கும் கேள்விகளுக்குத் தரும் பதில்களாக அவற்றை ஆக்கிவிடுவார்.
“ஒரு தேசத்தின் ஒரு நாகரிகத்தின் ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின் ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம். ஓர் எழுத்தாளன் ஆத்ம சக்தியோடு எழுதுகிறானே அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம். நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்” (1966) என்று பாரீசுக்குப் போ என்னும் புதினத்தின் முன்னுரையில் ஜெயகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
Question 6.
சிறுகதைகளைப் படைப்பதில் தங்களுடைய தனித்தன்மை வாய்ந்த திறமையை வாசகர்கள் கொண்டாடுகிறார்களே, இத்துறையில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்கங்கள் யாவை என்ற வாசகரின் கேள்விக்கு ஜெயகாந்தன் அளித்த பதில் யாது?
Answer:
நுணுக்கமா? அப்படித் தனியாக நான் எதையும் கையாளுவதாக எண்ணிச் செய்வதில்லை. என் மனத்தால், புத்தியால், உணர்வாய் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சனைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்கு அடிப்படையாகி அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சனைகளே.
நெடுவினா
Question 1.
“எதற்காக எழுதுகிறேன்” என்று ஜெயகாந்தன் எழுதுவதற்கான காரணத்தை விளக்கமளிக்கிறார்?
Answer:
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- தனிமுயற்சியின் பயன்
- நாற்பயன்
- கணவன்-புதல்வன்
- சமுதாயப் பார்வை
- முடிவுரை
முன்னுரை:
தன்னையறிதல் என்பதிலும் தன்னை உணர்த்துதல் என்பதிலும் முனைப்பாக இருந்தவர் ஜெயகாந்தன் மட்டுமே! அவர் எழுத்துலகில் எழுதுவதற்கான காரணங்களைக் காண்போம்.
தனிமுயற்சியின் பயன்:
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு, என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உண்டு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனி முயற்சியின் பயனுமாகும்.
நாற்பயன்:
வியாசன் முதல் பாரதி வரை தாங்கள் எதற்காக எழுதுகிறோம்? என்பதையும் கலையைத் தாங்கிப்பிடிக்கச் சொல்லவும் இல்லை. ஆனால் இவர்களைவிட கலையைத் தாங்கியவர்கள் யாரும் இல்லை. அறநெறியை உபதேசிக்க பாரதத்தை வியாசர் எழுதினார். தமிழ் இலக்கணம் நாற்பயனையே நூலின் பயனாகச் சுட்டுகிறது.
கணவன்-புதல்வன்:
கலைத்தன்மைக்கு எவ்விதக் குறைவும் வாராமல், கலாதேவியின் காதற் கணவனாகவும் சமுதாயத் தாயின் அன்புப் புதல்வனாகவும் இருந்துதான், நான் எழுதுகிறேன்.
சமுதாயப் பார்வை:
அர்த்தமே வடிவத்தை வளமாக்கும். வெறும் வடிவம் மரப்பொம்மைதான். அதனால் அதைப்பிடித்து துன்பப்படுத்தாமல், சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே நான் எழுதுகிறேன். கலைப்பணியில் சமூகப்பார்வை அடக்கம்.
முடிவுரை:
‘எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்கு எதிராக நடந்தால் நான் கண்டிக்கப்படவும், திருத்தப்படவும் உட்பட்டு இருக்கிறேன் என்கிறார் ஜெயகாந்தன்.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது…………………….
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம்
ஈ) வெளிநாட்டு முதலீடுகள்
Answer:
ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
Question 2.
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் – இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது?
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்.
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார். ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
Answer:
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.
குறுவினா
Question 1.
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
Answer:
- நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு.
- நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.
சிறுவினா
Question 1.
ஜெயகாந்தன் தம் கதை மாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். – இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் “தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:
“தர்க்கத்திற்கு அப்பால்” கதை மாந்தர்:
கண்ணில்லாத பிச்சைக்காரன், தர்மம் செய்தவன்
மாந்தர்களின் சிறப்புக் கூறி மெய்ப்பிக்கும் செயல்:
இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைக்காரனுக்கு இரண்டணாவை அவர் போட்டார். அதைப் பெற்றுக்கொண்டவர் கைகள் குவித்து, ‘சாமி, நீங்கபோற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்தப் பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யாமல் இருந்திருந்தாலோ அல்லது தர்மம் செய்த ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில்தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதைத் தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
தர்மம் தந்தவனும் அதைப்பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.
நெடுவினா
Question 1.
ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.
Answer: