Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.2 மெய்ஞ்ஞான ஒளி
கற்பவை கற்றபின்
Question 1.
கண்ணி வகையில் பாடப்பட்ட வேறு பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) தாயுமானவர் பாடல் – பராபரக் கண்ணி :
முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே!
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால்
தாக்காதே தாக்குந் தனியே பராபரமே
பார்த்த இட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே.
அன்பைப் பெருக்கி என தாருயிரைக் காக்க வந்த
இன்பப் பெருக்கே இறையே பராபரமே!
(ii) தமிழ்விடு தூது :
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை
ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை
ஈ) ஐம்பொறிகளை
Answer:
ஈ) ஐம்பொறிகளை
Question 2.
ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் ……………..
அ) பகர்ந்த னர்
ஆ) நுகர்ந்த னர்
இ) சிறந்தனர்
ஈ) துறந்தனர்
Answer:
அ) பகர்ந்த னர்
Question 3.
‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) ஆனந்த + வெள்ளம்
ஆ) ஆனந்தன் + வெள்ளம்
இ) ஆனந்தம் + வெள்ளம்
ஈ) ஆனந்தர் + வெள்ளம்
Answer:
இ) ஆனந்தம் + வெள்ளம்
Question 4.
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) உள்ளேயிருக்கும்
ஆ) உள்ளிருக்கும்
இ) உளிருக்கும்
ஈ) உளருக்கும்
Answer:
ஆ) உள்ளிருக்கும்
குறுவினா
Question 1.
உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?
Answer:
உண்மை அறிவனை உணர்ந்தோர் உள்ளத்தில் இறைவன் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றான்.
Question 2.
மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?
Answer:
இறைவனின் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பது மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைகிறது.
சிறுவினா
Question 1.
குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
Answer:
குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன :
(i) “மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் பி மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் a திருவடிகளின்மேல் பற்று வைக்காமல் பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.
(ii) நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.
(iii) மேலான பொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரிய செயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக!” என்று குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுகிறார்.
சிந்தனை வினா
Question 1.
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?
Answer:
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் :
(i) தன்னிலும் தகுதி முதலானவற்றில் குறைந்தவர்கள் என்றாலும் அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
(ii) இன்சொல் மட்டுமே பேசி மகிழ வேண்டும்.
(iii) பிறருக்கு உண்டாகும் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணி, இரக்கப்பட்டு, தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
(iv) நம் உடல் உழைப்பால் பிறருக்கு உதவ வேண்டும்.
(v) ஒருவரது நாக்கு பிறரைத் தூற்றவும், போற்றவும் செய்யும். நாவினால் சுட்ட வடு ஆறாது என்பதால், பிறர் மனம் புண்படாதபடி பேசுவதே பெரிய நற்பண்பாகும்.
(vi) நமது கண்கள் நல்ல நூல்களைப் படிக்கவும், நல்ல காட்சிகளை (திரைப்படம், தொலைக்காட்சி காணவும் செய்ய வேண்டும். மனதிற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை, நூல்களை பார்க்க, படிக்கக் கூடாது.
(vii) கோபமின்றி வாழ்தல் போன்றவை நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் ஆகும்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. குணங்குடியாரின் இயற்பெயர் ………………..
2. இறைவன், மனத்துள் எழுந்தருளி இருக்கும் உண்மையான ……………. ஆனவன்.
3. ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் ……………..
Answer:
1. சுல்தான் அப்துல்காதர்
2. அறிவு ஒளி
3. அரிய செயலாகும்
விடையளி :
Question 1.
குணங்குடி மஸ்தான் சாகிபு – குறிப்பு வரைக.
Answer:
(i) குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தவர்.
(ii) சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார்.
(iii) இயற்றிய நூல்கள் – எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக்
பாடல்
கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு
உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!
காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!
அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்
கரையறவே பொங்கும் கடலே பராபரமே!
அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே! – குணங்குடி மஸ்தான் சாகிபு
சொல்லும் பொருளும்
1. பகராய் – தருவாய்
2. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
3. பராபரம் – மேலான பொருள்
4. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
பாடலின் பொருள்
மேலானபொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளே எழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் திருவடிகளின் மேல் பற்றுவைக்காமல், பணத்தின் மீது ஆசைவைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.
நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய். மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள் செய்வாயாக.
ஆசிரியர் குறிப்பு
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.