TN 8 Tamil

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.3 சட்டமேதை அம்பேத்கர்

கற்பவை கற்றபின்

 

Question 1.
சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக
Answer:
சமூகச் சீர்திருத்தத்திற்கு உழைத்த பிற தலைவர்கள் :
1. பெரியார்
2. காந்தியடிகள்
3. நெல்சன் மண்டேலா
4. அம்பேத்கர்
5. முத்துலெட்சுமி ரெட்டி
6. மூவலூர் இராமாமிர்தம்
7. பாரதியார்
8. பாரதிதாசன்
9. அயோத்திதாசர்

Question 2.
அம்பேத்கரின் பண்புகளாக நீங்கள் உணர்ந்தவற்றை எழுதுக.
Answer:
இளமையில், இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்தில் பல அவமதிப்புகளுக்கு ஆளானவர். அதனால் அவர் பள்ளியையோ கல்வியையோ வெறுக்காமல் தொடர்ந்து படித்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம், பாரிஸ்டர் பட்டம் என்று முன்னேறி மிகச்சிறந்த சான்றோனாக உயர்ந்தார்.

இதில் அவருடைய கடுமையான உழைப்பு தெரிகிறது. ‘நூலகத்திற்கு முதல் ஆளாய்ச் சென்று இறுதி ஆளாய் வருவார்’ என்று கூறும்போது அவருடைய உயர்வுக்கு இந்த நூலகமே தூணாக இருந்துள்ளது. தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.

அம்பேத்கர் “நான்வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெயவம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்று கூறியுள்ளார். அதன்படியே அவர் நல்லறிவு பெற்றும், சுயமரியாதையுடனும் நன்னடத்தையுடனும் வாழ்ந்து காட்டினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார். அப்போராட்டத்தோடு அவர் நிற்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காகவும் பாடுபட்டார்.

அம்பேத்கரின் கருத்துகள் :
(i) கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து. அது உனக்கு பயன் தரும்.
(ii) கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.
(iii) சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
அம்பேத்கர் கல்வியாளராக பொருளாதார நிபுணராக, தத்துவவாதியாக, வரலாற்றாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, சட்ட அமைச்சராக இருந்து தன் பன்முக ஆற்றலால் மக்களுக்குத் தொண்டாற்றியவர்.

 

தெரிந்து தெளிவோம் :
(i) இரட்டைமலை சீனிவாசன் : இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.

(ii) அரசியல் அமைப்புச்சட்டம் : உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியாவிளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது.

இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் …………….
அ) இராதாகிருட்டிணன்
ஆ) அம்பேத்கர்
இ) நௌரோஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
Answer:
ஆ) அம்பேத்கர்

Question 2.
பூனா ஒப்பந்தம் ………………….. மாற்ற ஏற்படுத்தப்பட்டது.
அ) சொத்துரிமையை
ஆ) பேச்சுரிமையை
இ) எழுத்துரிமையை
ஈ) இரட்டை வாக்குரிமையை
Answer:
ஈ) இரட்டை வாக்குரிமையை

Question 3.
சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் …………….
அ) சமாஜ் சமாத சங்கம்
ஆ) சமாத சமாஜ பேரவை
இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை
ஈ) மக்கள் நல இயக்கம்
Answer:
அ) சமாஜ் சமாத சங்கம்

Question 4.
அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ……….. விருது வழங்கியது.
அ) பத்மஸ்ரீ
ஆ) பாரத ரத்னா
இ) பத்மவிபூசண்
ஈ) பத்மபூசன்
Answer:
ஆ) பாரத ரத்னா

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் …………………..
2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் ………………….
3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் ……………… சென்றார்.
Answer:
1. புத்தரும் அவரின் தம்மமும்.
2. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
3. இலண்டன்

குறுவினா

Question 1.
அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?
Answer:
அம்பேத்கர் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவர் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிப்பருவத்திலேயே பல அவமதிப்புகளுக்கு ஆளானார். மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

Question 2.
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.
Answer:
தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கண்ட பணிகள் :
(i) அம்பேத்கர் இந்தியச் சமூக அமைப்பில் நிலவிய சாதியமைப்பையும் தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்.

(ii) ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927ஆம் ஆண்டு துவங்கினார். சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

(iii) 1930ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.

 

Question 3.
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?
Answer:
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது: ‘என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்’ என்று அம்பேத்கர் கூறினார்.

சிறுவினா

Question 1.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?
Answer:
இந்திய அரசியல் அமைபச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் :
(i) 15-08-1947 அன்று இந்தியா விடுதலை பெற்றது. ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

(ii) 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது.

(iii) இக்குழுவில் கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.

(iv) அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை. இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.

(v) அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது. இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.

Question 2.
அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.
Answer:
அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி :
(i) 1935ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

(ii) ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைக் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.

(iii) சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டார்.

(iv) அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றி பெற்றனர்.

நெடுவினா

Question 1.
பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக.
Answer:
பூனா ஒப்பந்தம் :
(i) ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

(ii) இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

(iii) இதன் விளைவாக 1931ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

(iv) அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

 

சிந்தனை வினா

Question 1.
பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
பாகுபாடில்லாத க கள் சமூகம் உருவாக நமது கடமைகள் :
நாம் வாழும் சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு. நாம் பேசும் சொற்கள், செய்யும் செயல்கள் மற்றவரைப் பாதிக்காமலும், துன்புறுத்தாமலும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு பெயர்களுடனும் வெவ்வேறு கடமைகளுடன்தான் வாழ்கிறோம். வீட்டில் மகன் அல்லது மகள், பள்ளியில் மாணவன், அலுவலகத்தில் தொழிலாளி அல்லது முதலாளி, சமுதாயத்தில் குடிமகன் எனப் பல்வேறு வேடங்களைத் த தரித்துக் கொண்டுள்ளோம். தரித்துள்ள வேடத்தில் தவறின்றி நடந்துகொள்ள வேண்டும்.

தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், தன்னோடு வாழ்பவர்களுக்கும் உண்டான உரிமைகளைப் பேணி வாழ்வதற்கு அவன் முன் வர வேண்டும். அவ்வாறு வாழும்போது சமுதாயத்தில் மனித நேயம் தழைத்துவிடும். மனித நேயம் பேணப்பட்டால் உரிமைகள் பேணப்படும். சமூகச் சீர்குலைவு இருக்காது. ஒழுக்கக்கேடு, அச்சம் நிறைந்த சூழ்நிலை இவையெல்லாம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

ஆண், பெண் வேறுபாடுகளும், உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்று பாகுபாடின்றி இருக்க வேண்டும். இரு பாலரும் சம உரிமை பெற்று வாழ்ந்தால், பாகுபாடில்லாத மக்கள் சமூகம் நீ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ……………………..
2. அம்பேத்கர் பிறந்த நாள் …………………….
3. அம்பேத்கர் பிறந்த ஊர் ………………. மாநிலத்தில் ……………………. மாவட்டத்தைச் சேர்ந்த ………………. என்பதாகும்.
4. அம்பேத்கரின் பெற்றோர் …………………. ஆவர்.
5. அம்பேத்கரின் தந்தை …………………… ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
6. அம்பேத்கர் மும்பையில் உள்ள …………………… உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
7. அம்பேத்கரின் படிப்பிற்கு உதவிய மன்னர் ………………. மன்னர்.
8. அம்பேத்கர் சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் ………………….. பணியாற்றினார்.
9. அம்பேத்கர் 1915 இல் பண்டைக்கால ………………………… என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.
10. அம்பேத்கருக்குக் ……………….. பல்கலைக்கழகம் இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்’ என்ற ஆய்வுக்காக ………………….. பட்டம் வழங்கியது.
11. அம்பேத்கர் 1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக ……………………. சென்றார்.
12. அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு ………………
13. ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக அம்பேத்கர் 1923ஆம் ஆண்டு ………………….. பட்டம் பெற்றார்.
14. அம்பேத்கர் 1930ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ………………….. மாநாட்டில் கலந்து கொண்டார்.
15. அம்பேத்கர் தொடங்கிய கட்சி …………………………
16. அம்பேத்கர் துவங்கிய இதழ் ………………….. ஆண்டு 1927.
17. அம்பேத்கர் உருவாக்கிய அமைப்பு ……………………..
18. அம்பேத்கர் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்திய இடம் ……………. ஆண்டு 1930.
19. அம்பேத்கர் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் ………………………..
20. அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட குழு …………………………
21. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டம் வரலாற்று ஆசிரியர்களால் …………………….. எனப் போற்றப்படுகிறது.
22. அம்பேத்கரின் மறைவுக்குப் பின் வெளியான …………………….. ஆண்டு ……………….
23. அம்பேத்கர் இயற்கை எய்திய நாள் ஆண்டு ………………..
Answer:
1. பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
2. 14-04-1891
3. மகாராட்டிர, இரத்தினகிரி, அம்பவாதே
4. ராம்ஜி சக்பால்- பீமாபாய்
5. இராணுவப் பள்ளியில்
6. எல்பின்ஸ்டன்
7. பரோடா
8. உயர் அலுவலராகப்
9. இந்திய வணிகம்
10. கொலம்பியா, முனைவர்
11. இலண்டன்
12. 1921
13. முனைவர்
14. வட்டமேசை
15. சுதந்திரத் தொழிலாளர் கட்சி
16. ஒடுக்கப்பட்ட பாரதம்
17. சமாஜ் சமாத சங்கம்
18. நாசிக்
19. சட்ட அமைச்சராகவும் அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார்
20. அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு
21. மிகச் சிறந்த சமூக ஆவணம்
22. புத்தகம் புத்தரும் அவரின் தம்மமும், 1957
23. 06-12-1956

 

விடையளி :

Question 1.
அம்பேத்கரின் பிறப்பு பற்றி எழுதுக.
Answer:
அம்பேத்கர் பிறந்த நாள் – 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள் (14-4-1891)
பெற்றோர் – ராம்ஜி சக்பால் – பீமாபாய்.
ஊர் – மகாராட்டிர மாநிலம் – இரத்தினகிரி மாவட்டம் – அம்பவாதே – ஊர்.

Question 2.
அம்பேத்கரின் பொன்மொழியை எழுதுக.
Answer:
அம்பேத்கரின் பொன்மொழி :
“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று
முதல் தெய்வம் – அறிவு
இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை
மூன்றாவது தெய்வம் – நன்னடத்தை.

Question 3.
அம்பேத்கர் புத்த சமயம் மீது கொண்ட பற்றினை எழுதுக.
Answer:
அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார். இலங்கையில் நடைபெற்ற புத்தத் துறவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், உலகப் பெளத்த சமய மாநாடுகளிலும் கலந்து கொண்டார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Question 4.
அம்பேத்கருடன் இரட்டைமலை சீனிவாசன் எங்கு, எதற்காகச் சென்றார்?
Answer:
இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டார்.

Question 5.
அரசியல் அமைப்புச் சட்டம் – குறிப்பு எழுதுக.
Answer:
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்க ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது. இச்சட்டத்தினையே அரசியல் அமைப்புச் சட்டம் என்பர்.

உலகின் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன. அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.

Question 6.
அம்பேத்கரின் கல்வி பற்றி எழுதுக.
Answer:
அம்பேத்கர் மும்பையில் எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் 1904 ஆம் ஆண்டு சேர்ந்தார். 1907 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தார். மும்பைப் பல்கலைக்கழத்தில் 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.

 

1915இல் பண்டைக்கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப்பட்டம் பெற்றார்.

இந்தியாவின் தேசியப்பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.

1920 ஆம் ஆண்டு பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் சென்றார். 1921ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *