Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.4 பால் மனம்
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 9.4 பால் மனம்
கற்பவை கற்றபின்
Question 1.
குழந்தைகளின் நற்பண்புகளாகப் ‘பால் மனம்’ கதையின் வழி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) குழந்தைக்கு வீட்டு நாய், தெருநாய் வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கும்.
(ii) கீரை விற்கும் கிழவியைக் கூட தன் வீட்டில் ஒருவராகப் பார்க்கும் பரந்த குணம்.
(iii) கூலித்தொழிலாளி வெயிலில் காலில் செருப்பில்லாமல் சுமை நிறைந்த வண்டியை இழுப்பதைப் பார்க்கும் போது அத்தொழிலாளியின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம்.
(iv) ஆட்டுக்குட்டியின் பசியைப் போக்க, குழந்தைக்கு வைத்திருந்த புட்டிப்பாலைக் கொடுக்கும் கருணைப் பரிவு. இவையே பால் மனம் கதையின் வழி நான் அறிந்த குழந்தைகளின் நற்பண்புகள்.
மதிப்பீடு
Question 1.
குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்ளைப் பற்றித் தொகுத்து எழுதுக.
Answer:
மனிதனின் படைப்பு விசித்திரமானது. அதிலும் குழந்தை பிராயம் மிகவும் அழகானது. குழந்தை கிருஷ்ணாவின் உள்ள அழகு பற்றி இக்கதையின் மூலம் பார்க்கலாம்.
குழந்தை கிருஷ்ணா பிஞ்சுவிரல், வெள்ளரிப் பிஞ்சாக முகம், சிறகு போன்ற இமைகள், கண்ணாடி போன்ற விழிகள், பூ போல் உதடுகள், ஒளியரும்புகளான பற்கள், நுங்கு நீரின் குளிர்ச்சியான குரல், தெய்வ வடிவான அழகு, முகம் உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான சிந்தனைச் சாயல். இந்த ஒட்டு மொத்த இணைப்புதான் கிருஷ்ணா.
சன்னலைப் பிடித்தவாறு தெருவில் பார்த்த கிருஷ்ணா தன் அம்மாவிடம் குப்பைத் தொட்டியோரம் இருந்த சொறிநாயைக் காட்டினாள். அம்மா அது அசிங்கம் என்றும் தன் வீட்டில் இருக்கும் டாமி அழகானது, சுத்தமானது’ என்றும் கூறினாள். மேலும் ‘அதனைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்’ என்றும் கூறினாள். கிருஷ்ணா , “திட்டவில்லையென்றால் தொடலாமா?” என்று கேட்டாள். கிருஷ்ணாவிற்குத் தெரு நாயும், வீட்டு நாயும் வேறில்லை.
வீட்டுவாசலில் கீரைவிற்கும் கிழவியைப் பார்த்ததும் உற்சாகமாக சென்ற கிருஷ்ணாவை அம்மா “அவளைத் தொடாதே உடம்பு சரியில்லாதவள்” என்று கூவினாள். அக்கண்டிப்பில் 3 திகைத்த கிருஷ்ணா “அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடவில்லையா சித்தப்பா?” என்று கேட்டாள்.
கிருஷ்ணா சித்தப்பாவுடன் காந்தி மண்டபத்துக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் 5 போது ஒருவர் காலில் செருப்பில்லாமல் நிறைந்த பாரத்துடன் கைவண்டியை இழுத்துச் செல்வதைப் பார்த்தாள். அவருக்குக் கல்குத்தும், வெயில் சுடும் எனக் கவலைப்பட்டாள். தன் சித்தப்பாவிடம் “உன் செருப்பைக் கொடுத்து விடு, நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே” என்றாள்.
அடுத்த நாள் காலையில் தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் தாங்காமல் இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நிற்பதைக் கண்டாள். உடனே கிருஷ்ணா, கைக்குழந்தையின் அருகில் வைத்திருந்த பால் புட்டியை எடுத்து வந்து ஒரு குட்டியின் வாயில் வைத்து அதற்குப் பால் ஊட்டினாள். அதைக் கண்ட அம்மாவும், அப்பாவும், சித்தப்பாவும் வியப்புடன் நின்ற னர்.
தெருநாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கம், கீரை விற்கும் பாட்டியிடம் காட்டிய பாசம், வண்டி இழுக்கும் மனிதரின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம், ஆட்டுக்குட்டியிடம் காட்டிய கருணைப் பரிவு இவையெல்லாம் குழந்தை கிருஷ்ணாவின் சிறப்பு பண்புநலன்கள்.
ஆனால் அவள் எட்டு வயதில் தன் தம்பி தெருநாய்க்குப் பால் சாதம் பேடுவதைத் தவறு எனக் கூறுகிறாள். கல்லடிப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறாள். கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்டால், “எப்பவும் இங்கேதான் வருவாயா? நான் தரமாட்டேன்” என்று கூறுகிறாள். இதையெல்லாம் கிருஷ்ணாவின் அம்மா ஏற்றுக் கொள்கிறார்.
உலகச்சூழல் ஒவ்வொரு குழந்தையையும் மாற்றிவிடுகிறது.
ஆசிரியர் குறிப்பு
கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி; சிறுகதைகள், புதினங்கள், குறும் புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார். உயிர் அமுதாய், நிலாக்கால நட்சத்திரங்கள்,
அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.