Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து
கற்பவை கற்றபின்
Question 1.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
* வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! – பாரதியார்
Question 2.
படித்துச் சுவைக்க.
Answer:
செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.
உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ; காதல் நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே! – து. அரங்க ன்
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………………………..
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
Answer:
அ) வைப்பு
Question 2.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று+என்றும்
Question 3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது
Question 4.
‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
Answer:
இ) அறிந்ததனைத்தும்
Question 5.
‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த
தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
வாழ்க – வானமளந்த
வாழிய – வாழ்க
எங்கள் – என்றென்றும்
வண்மொழி – வளர்மொழி
குறுவினா
Question 1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
Answer:
ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.
Question 2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
Answer:
வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருள்களையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது.
சிறுவினா
Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
- எல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே! வாழ்க.
- எல்லாவற்றையும் அறிந்துரைக்கும் தமிழே! வாழ்க.
- ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
- உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
- எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
- தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும் சிறப்படைக!
- பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
- என்றென்றும் தமிழே! வாழ்க!
- வானம் வரையுள்ள எல்லாப் பொருட்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க.
சிந்தனை வினா
Question 1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
Answer:
- நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, – பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
- அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே மொழி நம் தமிழ் மொழிதான்.
- தமிழ் மொழி ஒன்றுதான், வாழ்வுக்கே இலக்க
- இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
……………………. கருத்தை அறிவிக்கும் கருவி ஆகும்.
அ) நாடு
ஆ) மாநிலம்
இ) மொழி
ஈ) ஊர்
Answer:
இ) மொழி
Question 2.
தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ……………….. ஆகக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.
அ) அறிவு
ஆ) புத்தி
இ) உயிர்
ஈ) தலை
Answer:
இ) உயிர்
Question 3.
…………………. அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.
அ) கடல்
ஆ) பூமி
இ) வானம்
ஈ) நாடு
Answer:
இ) வானம்
Question 4.
‘இசை’ என்பதன் பொருள் ………………….
அ) கருவி
ஆ) புகழ்
இ) பொறுமை
ஈ) சிறுமை
Answer:
ஆ) புகழ்
Question 5.
………………. நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே.
அ) சூழ்கடல்
ஆ) ஆர்கழி
இ) சூழ்கலி
ஈ) விரிகடல்
Answer:
இ) சூழ்கலி
Question 6.
வானமளந்தது அனைத்தும் அளந்திடு …………………….. வாழியவே.
அ) வண்மொழி
ஆ) பண்மொழி
இ) தன்மொழி
ஈ) செம்மொழி
Answer:
அ) வண்மொழி
Question 7.
தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க ……………………
அ) ஆந்திரா
ஆ) கர்நாடகா
இ) கேரளம்
ஈ) தமிழ்நாடு
Answer:
ஈ) தமிழ்நாடு
Question 8.
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………..
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) சுரதா
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதியார்
Question 9.
சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் ……………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தமிழண்ணல்
ஈ) கு.பா.ரா.
Answer:
அ) பாரதியார்
Question 10.
‘சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர்’ என்றெல்லாம் அழைக்கப்படுபவர் ……………………..
அ) சீட்டுக்கவி
ஆ) பாரதிதாசன்
இ) குமரகுருபரர்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்
Question 11.
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் …………………
அ) சுரதா
ஆ) பாரதிதாசன்
இ) காந்தி
ஈ) வாணிதாசன்
Answer:
ஆ) பாரதிதாசன்
Question 12.
‘வண்மொழி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) வண் + மொழி
ஆ) வண்மை + மொழி
இ) வளமை + மொழி
ஈ) வாண் + மொழி
Answer:
ஆ) வண்மை +மொழி
Question 13.
‘ஏழ்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) ஏழ் + கடல்
ஆ) ஏழ்மை + கடல்
இ) ஏழு + கடல்
ஈ) எளிமை + கடல்
Answer:
இ) ஏழு + கடல்
Question 14.
‘வளர் + மொழி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) வளர்மொழி
ஆ) வளமைமொழி
இ) வளமொழி
ஈ) வளர்ந்தமொழி
Answer:
அ) வளர்மொழி
Question 15.
‘சீட்டு + கவி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) சீட்டுகவி
ஆ) சீட்டுக்கவி
இ) சீடைக்கவி
ஈ) சீட்கவி
Answer:
ஆ) சீட்டுக்கவி
Question 16.
‘சிந்தனை + ஆளர்’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) சிந்தனை ஆளர்
ஆ) சிந்தனைஎளர்
இ) சிந்தனையாளர்
ஈ) சிந்து ஆளர்
Answer:
இ) சிந்தனையாளர்
குறுவினா
Question 1.
வளமான தமிழ்மொழி எதனை அறிந்து உரைக்கும்?
Answer:
ஆகாயத்தில் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி.
Question 2.
தமிழ்மொழி எது உள்ள வரையிலும் வாழ வேண்டும்?
Answer:
எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!
Question 3.
எந்த இருள் நீங்க வேண்டும்?
Answer:
எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்க வேண்டும்.
Question 4.
தமிழ்மொழி எங்குச் சிறப்படைய வேண்டும்?
Answer:
தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைய வேண்டும்.
Question 5.
எந்தத் துன்பம் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும்?
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க.
Question 6.
பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதியார்.
Question 7.
பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?
Answer:
இந்தியா, விஜயா இதழ்களை நடத்தினார்.
Question 8.
பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
சந்திரிகையின் கதை, தராசு போன்றவை பாரதியார் எழுதிய உரைநடை நூல்களாகும்.
Question 9.
பாரதிதாசன், பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:
சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.
சிறுவினா
Question 1.
பாரதியார் குறிப்பு எழுதுக.
Answer:
பெயர் : பாரதியார்
இயற்பெயர் : சுப்பிரமணியன்
ஊர் : எட்டயபுரம்
பிறப்பு : 11.12.1882
பெற்றோர் : சின்னசாமி – இலக்குமி அம்மையார்
சிறப்பு பெயர்கள் : பாரதி, ஷெல்லிதாசன், புதுக்கவிதைக்கு முன்னோடி, சரஸ்வதி பட்டம், காளிதாசன், தேசாபிமானி, நித்தியதீரர், மகாகவி.
இதழ்ப்பணி : சக்கரவர்த்தினி, கர்மயோகி, பாலபாரத், சுதேசமித்திரன், இந்தியா, விஜயா.
இயற்றியவை : கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை, தராசு, புதுக்கவிதைகள், பாப்பா பாட்டு, பூலோக ரம்பை, திண்டி மசாஸ்திரி, சின்ன சங்கரன் கதை, நவதந்திரக் கதைகள்.
இறப்பு : 11.09.1921 (39 ஆண்டுகள்)
சொல்லும் பொருளும்
1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வைப்பு – நிலப்பகுதி
3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி – வளமிக்க மொழி
5. இசை – புகழ்
6. தொல்லை – பழமை, துன்பம்