TN 8 Tamil

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை

கற்பவை கற்றபின்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகள் எடுத்து எழுதி வகைப்படுத்துக.
Answer:
இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் தேதி பட்டம் பெற்று ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில் கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது.

  • பாடங்களை – ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு
  • தேர்வில் – இல் – ஏழாம் வேற்றுமை உருபு
  • தொழிலில் – இல் – ஏழாம் வேற்றுமை உருபு
  • நுழைவதற்கு கு – நான்காம வேற்றுமை உருபு

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ………………… ஆகும்
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ) வேற்றுமை
Answer:
ஈ) வேற்றுமை

Question 2.
எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) விளி
ஈ) பயனிலை
Answer:
இ) விளி

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை வரும்.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
அ) மூன்றாம்

Question 4.
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் …………………….. வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) ஆறாம்
ஈ) ஏழாம்
Answer:
ஆ) மூன்றாம்

Question 5.
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் …………………….. பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல்
ஆ) அழித்தல்
இ) கொடை
ஈ) அடைதல்
Answer:
அ) ஆக்கல்

பொருத்துக

1. மூன்றாம் வேற்றுமை – அ) இராமனுக்குத் தம்பி இலக்குவன்
2. நான்காம் வேற்றுமை – ஆ) பாரியினது தேர்
3. ஐந்தாம் வேற்றுமை – இ) மண்ணால் குதிரை செய்தான்
4. ஆறாம் வேற்றுமை – ஈ) ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
Answer:
1. இ
2. அ
3. ஈ
4. ஆ

சிறுவினா

Question 1.
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
Answer:

  • எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் தனித்து நின்று, இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை என்பர்.
  • இதனை முதல் வேற்றுமை’ என்றும் கூறுவர்.
  • எடுத்துக்காட்டு: பாவை வந்தாள்.

Question 2.
நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
Answer:
கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருளில் என்றால் என்ன?
Answer:

  • வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.
  • ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

எடுத்துக்காட்டு :

  • தாயோடு குழந்தை சென்றது.
  • அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
ஒரு ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் படிப்பதே கிடையாது. அந்தப் பெரியவர் எவ்வளவு சொல்லியும் இளமைப்பருவத்தில் அவன் கேட்கவில்லை.

ஆனால் இளைய மகனோ, தந்தையின் சொல்லை மீறாமல் நன்கு படித்தான். தந்தையின் விருப்பப்படி விவசாயத்தைச் செய்தான். ஆனால் பெரிய மகனோ படிக்காமல், வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பான்.

முதியவர் இறக்கும் போது ஒரு உயிலை எழுதி வைத்துச் சென்றார். வீட்டைச் சுற்றி உள்ள காலி இடத்தில் புதையல் இருக்கிறது என அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த முதியவர் இறந்தவுடன் காலியிடத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டனர்.

மூத்த மகன் தனக்குரிய பகுதியைத் தோண்டிப் பார்த்துவிட்டு புதையல் எதுவும் இல்லாததால், தன் தந்தை தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி குழிகளை மூடி விடுகிறான். ஆனால் இளையவனோ தோண்டிப் பார்த்துவிட்டு, அதனை மூட மனமில்லாமல் தென்னம் பிள்ளைகளை நட்டான்.

மூத்தவன் கல்வியறிவு இல்லாததால் சொத்தினை விற்று, பரம ஏழையாகப் போனான். இளையவனுக்கு, தென்னம் பிள்ளைகள் வளர்ந்து, பணத்தை அள்ளிக் கொடுத்தது.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

கல்வியே அழியாச் செல்வம்

தாயே! தமிழே! வணக்கம்.

தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும். பெருமைமிகு சபைக்கு முதற்கண் வணக்கம்.

கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். “தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்பார் திருவள்ளுவர். ஆம்! படிக்கப் படிக்கத்தான் நம் அறிவும் V பெருகும். அதுதான் அழியாத செல்வம். செல்வம் சேகரித்து வைத்திருந்தால் அது ஒருநாள் திருடு போகலாம். பொருட்கள் வாங்கி வைத்தால், அது ஒருநாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லலாம் அல்லது தீக்கு ஆளாகலாம். ஆனால் கல்விச் செல்வத்தைத் திருட முடியாது. எரிக்க முடியாது. வெள்ளத்தால் அடித்துச் செல்ல முடியாது.

மற்றவர் மனதில் அழியாமல் அது நிற்கும். அதனால் தான் அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்கின்றனர். எனவே அழியாத கல்விச் செல்வத்தை நாம் அனைவரும் கற்போம்.

நன்றி! வணக்கம்.

சொல்லக்கேட்டு எழுதுக.

தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல்; தமிழுக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ்நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவர் இலர்; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இலர்.

பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளரவளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. திருக்குறளுக்குரிய சிறப்பே அதுதான். அஃது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். எனவே திருக்குறளில்லாத வீடும் இருக்கக் கூடாது! திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது!

கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

மா – மாவிலை, மாமரம், மாங்காய்
தேன் – மலர்த்தேன், தேன்சிட்டு, தேன்கூடு
மலர் – தேன்மலர்
செம்மை – சேயிலை, செங்குருவி, செந்தேன்

சிட்டு – சிட்டுக்குருவி, தேன்சிட்டு
கனி – மாங்கனி, கனிமரம், தேன்கனி
குருவி – சிட்டுக்குருவி, குருவிக்கூடு
இலை – மாவிலை
காய் – மாங்காய், காய்கனி
கூடு – தேன்கூடு, குருவிக்கூடு
முட்டை – குருவிமுட்டை
மரம் – மாமரம், செம்மரம்

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
4. கபிலன், தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா? என்று கேட்டான்.
5. திரு. வி. க. எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.

பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

நூல் பல கல் என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகமாகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

Question 1.
எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?
Answer:
உலகப் புத்தக நாள்.

Question 2.
புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
Answer:
இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம்.

Question 3.
புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
Answer:
11 நாட்கள். (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)

Question 4.
புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
Answer:
நுழைவுக் கட்டணம் இல்லை.

Question 5.
புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
Answer:
10 சதவீதக் கழிவு.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை

நூலகம்

முன்னுரை :
‘நூலகம் அறிவின் ஊற்று’
‘வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்’
என்றார் பேரறிஞர் அண்ணா . ஊரில் உள்ள ஒரு நூலகத்தையாவது, நாம் பயன்படுத்த வேண்டாமா? நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நூலகத்தின் தேவை :
‘சாதாரண மாணவர்களையும்
சாதனையாளர்களாக உயர்த்துவது நூலகம்’

  • ஏழை மாணவர்களும் இளைஞர்களும் படிப்பதற்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
  • அன்றாடச் செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது.
  • ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது.

வகைகள் :
மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின் நூலகம் எனப் பலவகை நூலகங்கள் உள்ளன.

நூலகத்தில் உள்ளவை :
‘அறிவுப் பசிக்கு உணவு நூலகம்’
தமிழ் மற்றும் ஆங்கிலக் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுநூல்கள், வரலாற்று நூல்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், அகராதிகள், களஞ்சியங்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன.

படிக்கும் முறை :
நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும். நூல்களைக் கிழிக்கவோ, சேதப்படுத்துவதோ கூடாது. படித்து முடித்தவுடன் மீண்டும் உரிய அலமாரியில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை :
‘நம் அகம்
நூல் அகம்’
நாளும் நூல் பல கற்று சிறந்த மேதையாக வரவும், நூலகம் துணை செய்கிறது. நூலகம் தேடிச் சென்று, நூல்களைப் படிப்போம்! உயர்வோம்!!
‘நூலகம் அறிஞர்களின் வாழ்வில்லம்’

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்தி கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.

1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர் …………………………
2. கேடில் விழுச்செல்வம் ……………………….
3. குமரகுருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று ……………………….
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள் ……………………….
5. ஏட்டுக் கல்வியுடன் …………………………. கல்வியும் பயில வேண்டும்.
6. திரு. வி. க. எழுதிய நூல்களுள் ஒன்று ………………………
7. மா + பழம் என்பது …………………. விகாரம்.
Answer:


Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை 3
பழமொழி – அறிவே ஆற்றல்

நிற்க அதற்குத் தக…..

என் பொறுப்புகள்:

1. நாள்தோறும் ஒரு திருக்குறள் கற்பேன்.
2. அனைவரிடமும் அன்புகொண்டு வாழ்வேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நிறுத்தக்குறி – Punctuation
2. அணிகலன் – Ornament
3. திறமை – Talent
4. மொழிபெயர்ப்பு – Translation
5. விழிப்புணர்வு – Awareness
6. சீர்திருத்தம் – Reform

இணையத்தில் காண்க

Question 1.
திரு. வி. க. எழுதிய நூல்களின் விவரங்களை இணையத்தில் தேடி எழுதுக.
Answer:

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை 5

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வேற்றுமை வகை ……………….
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) மூன்று
Answer:
இ) எட்டு

Question 2.
இரண்டாம் வேற்றுமை உருபு ……………….
அ) கண்
ஆ) ஐ
இ) கண்
ஈ) ஓடு
Answer:
ஆ) ஐ

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை ……………………
அ) நான்காம் வேற்றுமை
ஆ) ஐந்தாம் வேற்றுமை
இ) மூன்றாம் வேற்றுமை
ஈ) ஏழாம் வேற்றுமை
Answer:
இ) மூன்றாம் வேற்றுமை

Question 4.
‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள்
அ) தகுதி
ஆ) நட்பு
இ) பகை
ஈ) கொடை
Answer:
ஈ) கொடை

Question 5.
‘புகை மனிதனுக்குப் பகை’ – இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………………
அ) தகுதி
ஆ) நட்பு
இ) பகை
ஈ) முறை
Answer:
இ) பகை

Question 6.
‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ இதில் இடம்பெறும் நான்காம் வேற்றுமைப் பொருள் ……………….
அ) அதுவாதல்
ஆ) பொருட்டு
இ) முறை
ஈ) எல்லை
Answer:
இ) முறை

Question 7.
‘தலையின் இழிந்த மயிர்’ – இதில் இடம்பெறும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்
அ) நீங்கல்
ஆ) ஒப்பு
இ) எல்லை
ஈ) ஏது
Answer:
அ) நீங்கல்

Question 8.
உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை ……………………….
அ) முதல் வேற்றுமை
ஆ) ஐந்தாம் வேற்றுமை
இ) ஆறாம் வேற்றுமை
ஈ) எல்லை
Answer:
இ) ஆறாம் வேற்றுமை

குறுவினா

Question 1.
வேற்றுமை என்றால் என்ன?
Answer:
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறைமையை வேற்றுமை என்பர்.

Question 2.
வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • வேற்றுமை எட்டு
  • வகைப்படும்.
  • முதல் வேற்றுமை
  • ஐந்தாம் வேற்றுமை
  • இரண்டாம் வேற்றுமை
  • ஆறாம் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
  • ஏழாம் வேற்றுமை
  • நான்காம் வேற்றுமை
  • எட்டாம் வேற்றுமை

Question 3.
வேற்றுமை உருபுகள் என்றால் என்ன?
Answer:
பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை வேற்றுமை உருபுகள் என்பர்.

Question 4.
மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் யாவை?
Answer:
ஆல், ஆன், ஒடு, ஓடு.

Question 5.
ஐந்தாம் வேற்றுமைக்குரிய உருபுகள் யாவை?
Answer:
இல், இன்.

Question 6.
ஆறாம் வேற்றுமைக்கு உருபுகள் யாவை?
Answer:
அது, ஆது, அ.

Question 7.
உருபு இல்லாத வேற்றுமைகள் எவை?
Answer:

  • முதலாம் வேற்றுமை
  • எட்டாம் வேற்றுமை

Question 8.
மூன்றாம் வேற்றுமை உருபு எவ்வெவ் பொருள்களில் வரும்?
Answer:
கருப்பொருள், கருத்தா பொருள்.

Question 9.
சொல்லுருபுகள் என்றால் என்ன?
Answer:
சில இடங்களில் உறுப்புகளுக்குப் பதிலாக முழு சொற்களே வருவதும் உண்டு. அவற்றைச் சொல்லுருபுகள் என்பர்.

Question 10.
ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் வரும் உருபு எது?
Answer:
இல்.

Question 11.
முதல் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியவற்றின் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  • முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்பர்.
  • எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பர்.

The Complete Educational Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *