Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.2 மழைச்சோறு
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.2 மழைச்சோறு
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.2 மழைச்சோறு
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் பகுதியில் பாடப்படும் மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
பாடல் – 1
ஆத்தா மகமாயி வந்திடம்மா
ஆத்தா மகமாயி வந்திடம்மா
உனக்கு எத்தனையோ பூச செஞ்சோம்
உனக்கு எத்தனையோ பூச செஞ்சோம்
வாம்மா வாம்மா வந்து மழைய குடும்மா
குடும்மா கருத்தம்மா
பசி வயிறு புடுங்கு தம்மா
மழை பெய்யச் சொல்லம்மா
மழை பெய்யச் சொல்லம்மா
பாடல் – 2
மழையப்பா மழையப்பா
கொஞ்சம் வாப்பா
இத்தனை நாள் வயல்
காணாதது போதாதா?
என்ன அப்பா கோபம்
மகன்கள் பண்ண
தப்ப மன்னிக்க மாட்டியா?
மன்னிச்சு வாப்பா
மானங்காக்க வாப்பா
மனமிரங்கி வாப்பா
மழையப்பா மழையப்பா
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ………………………
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடை மிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
Answer:
அ) பெருமழை
Question 2.
‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்
Answer:
அ) வாசல்+எல்லாம்
Question 3.
‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
Answer:
ஈ) பெற்று + எடுத்தோம்
Question 4.
கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
Answer:
ஆ) காலிறங்கி
குறுவினா
Question 1.
மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?
Answer:
(i) கடலைச் செடி, முருங்கைச் செடி, கருவேலங்காடு, காட்டுமல்லி என அனைத்தும் மழையில்லாமல் வாடிப்போனது. பெற்றெடுத்த குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை .
(ii) கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, ஏற்றம் இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்.
Question 2.
மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
Answer:
மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.
சிறுவினா
Question 1.
கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
Answer:
- வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்.
- இந்தக் கோலத்தைக் கரைக்க மழை வரவில்லை !
- பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.
- அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை .
Question 2.
மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
Answer:
- கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.
- முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை .
- கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை.
- மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.
Question 3.
மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
Answer:
- மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசிபோல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.
- சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.
- ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.
சிந்தனை வினா
Question 1.
மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?
Answer:
மழை வளம் பெருக அதிகப்படியான மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மரங்களை நட்டால் மட்டும் போதாது. அதனை நன்கு பராமரிக்க வேண்டும். எங்காவது மரங்கள் வெட்டப்படும் போது, அதனைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயம் வைக்க வேண்டும். மழை பெய்யும் காலங்களுக்கு முன் குளங்கள் குட்டைகளை தூர்வார வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது …………………….
அ) மழை
ஆ) உணவு
இ) உடை
ஈ) பணம்
Answer:
அ) மழை
Question 2.
கல் இல்லாக் காட்டில் …………………….. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
Answer:
ஆ) கடலைச் செடி
Question 3.
முள்ளில்லா காட்டில் …………………. போட்டனர்.
அ) முருங்கைச் செடி
ஆ) கடலைச் செடி
இ) கருவேல மரம்
ஈ) காட்டு மல்லி
Answer:
அ) முருங்கைச் செடி
Question 4.
‘வனவாசம் சென்று விடுவோம்’ என்று கூறியவர் …………………..
அ) புலவர்
ஆ) குறவர்
இ) உழவர்
ஈ) மறவர்
Answer:
இ) உழவர்
குறுவினா
Question 1.
எங்கெல்லாம் கோலம் இடப்பட்டது?
Answer:
வாசல் மற்றும் பாதைகளில் கோலம் இடப்பட்டது.
Question 2.
கடலைச் செடி வாடக் காரணம் யாது?
Answer:
மழை இல்லாததால் கடலைச் செடி வாடியது.
Question 3.
எவற்றை உழவர்கள் தலையில் வைத்துச் செல்கின்றனர்?
Answer:
மழைச் சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் ஆகியவற்றை உழவர்கள் தலையில் வைத்துச் செல்கின்றனர்.
Question 4.
சிட்டு போல மின்னியது எது?
Answer:
சிட்டு போல மின்னியது மழை.
சிறுவினா
Question 1.
மழைச் சோற்று நோன்பு பற்றிக் குறிப்பிடுக.
Answer:
(i) மழையில்லாமல் பஞ்சம் ஏற்படும் நேரங்களில் சிற்றூர் மக்கள் வீடு வீடாகச் சென்று உப்பில்லாத சோற்றை ஒரு பானையில் வாங்குவார்கள். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அனைவரும் பகிர்ந்து உண்பர்.
(ii) கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக இது நிகழும். இதனைக் கண்டு மனம் இரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனை மழைச்சோற்று நோன்பு என்று கூறுவார்கள்.
சொல்லும் பொருளும்
பாதை – வழி
கனத்த – மிகுந்த
பெண்டுகளே – பெண்களே
சீமை – ஊர்