Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்
கற்பவை கற்றபின்
Question 1.
உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
- பரணி
- கலம்பகம்
- அந்தாதி
- பள்ளு
- கோவை
- பிள்ளைத்தமிழ்
- சதகம்
- குறவஞ்சி
- தூது
Question 2.
போர்க் கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
சிங்கம் …………………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை
Answer:
இ) முழை
Question 2.
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ………………………
அ) வீரம்
ஆ) அச்சம்
இ) நாணம்
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஆ) அச்சம்
Question 3.
‘வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) வெம் + கரி
ஆ) வெம்மை + கரி
இ) வெண் + கரி
ஈ) வெங் + கரி
Answer:
ஆ) வெம்மை + கரி
Question 4.
‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) என் + இருள்
ஆ) எட்டு + இருள்
இ) என்ற + இருள்
ஈ) என்று + இருள்
Answer:
ஈ) என்று + இருள்
Question 5.
‘போல் + உடன்றன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) போன்றன
ஆ) போலன்றன
இ) போலுடன்றன
ஈ) போல்உடன்றன
Answer:
இ) போலுடன்றன
குறுவினா
Question 1.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
Answer:
தங்கள் உயிரைப் பறிக்க வந்த எமனோ என்று சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கினர்.
Question 2.
கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
Answer:
கலிங்க வீரர்கள் தம்மை அழிக்க வந்த தீயோ என்று அஞ்சி ஓடினர்.
Question 3.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
Answer:
- படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
- கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
- யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
- எந்தத் திசையில் செல்வது என்று தெரியாமல் மலைக் குகை மற்றும் புதருக்குள் தப்பி ஒளிந்து கொண்டனர்.
சிறுவினா
Question 1.
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படைவீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
Answer:
- கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையா” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரைப் பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.
- படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.
- எந்தத் திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.
- ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.
- யானை பிளிறியதைக்கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.
சிந்தனை வினா
Question 1.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
- ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கையாக அமைந்த அரண்களும்,
- நான்கு திசைகளின் எல்லைகளில் பாதுகாப்புப் படை வீரர்களும்,
- வேறுபட்ட சிந்தனை கொண்ட படைத் தலைவர்களும்,
- திறமையான படை வீரர்களும் தேவை எனக் கருதுகிறேன்.
கூடுதல் வினாக்கள்இயல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
செயங்கொண்டார் பிறந்த ஊர் ……………………..
அ) ஆலங்குடி
ஆ) தீபங்குடி
இ) மால்குடி
ஈ) லால்குடி
Answer:
ஆ) தீபங்குடி
Question 2.
கலிங்கத்து பரணி ………………………. வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
அ) 96
ஆ) 24
இ) 95
ஈ) 18
Answer:
அ) 96
Question 3.
தமிழில் முதன் முதலில் தோன்றிய பரணி நூல் ……………………
அ) தக்கயாகப்பரணி
ஆ) கலிங்கத்துப் பரணி
இ) இரணிய வதைப் பரணி
ஈ) பாசவதைப் பரணி
Answer:
ஆ) கலிங்கத்துப் பரணி
Question 4.
‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ – என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ………………………..
அ) புகழேந்திப் புலவர்
ஆ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்
Answer:
இ) ஒட்டக்கூத்தர்
Question 5.
கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை …………………
அ) 599
ஆ) 598
இ) 590
ஈ) 595
Answer:
அ) 599
குறுவினா
Question 1.
பரணி இலக்கியம் எதனைப் பற்றியது?
Answer:
போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவது பரணி இலக்கியமாகும்.
Question 2.
செயங்கொண்டார் – குறிப்பு வரைக.
Answer:
- முதல் குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவர்.
- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் “பரணிக்கோர் செயங்கொண்டார்” என்று புகழ்ந்துள்ளார்.
- செயங்கொண்டார் “தீபங்குடி” என்னும் ஊரைச் சார்ந்தவர்.
- கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் இவர்.
Question 3.
இஃது என்ன மாய வித்தையோ என கலிங்கத்துப் படை வியக்கக் காரணம் யாது?
Answer:
சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்க வீரர்கள் இஃது என்ன மாய வித்தையோ என்று வியந்தனர்.
Question 4.
சோழப் படையின் யானைகள் எவ்வாறு பிளிறின?
Answer:
- சோழப் படையின் யானைகள் சினமுற்று இடியைப் போல பிளிறின.
- இதனைக் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாகக் கலிங்க வீரர்கள் அஞ்சினர்.
- கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடும்போது தங்களுடைய நிழலையும் மற்றவர் நிழலையும் பார்த்து தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி ஓடினர்.
சிறுவினா
Question 1.
கலிங்கத்துப்பரணி – குறிப்பு வரைக.
Answer:
- கலிங்கத்துப்பரணி 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
- பரணி இலக்கிய வகையைச் சார்ந்தது.
- தமிழில் பாடப்பட்ட முதல் பரணி நூல் இதுவே ஆகும்.
- கலிங்கத்துப் போர் வெற்றியை இந்நூல் பேசுகிறது.
- இந்நூலை இயற்றியவர் செயங்கொண்டார்.
- கலித்தாழிசையால் பாடப்பட்ட நூல் இது.
- 599 தாழிசைகள் கொண்டது.
சொல்லும் பொருளும்
- மறலி – காலன்
- கரி – யானை
- தூறு – புதர்
- அருவர் – தமிழர்
- உடன்றன – சினந்து எழுந்தன
- வழிவர் – நழுவி ஓடுவர்
- பிலம் – மலைக்குகை
- மண்டுதல் – நெருங்குதல்
- இறைஞ்சினர் – வணங்கினர்
- முழை – மலைக்குகை