Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
Samacheer Kalvi 10th Social Science Guide Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
TN Board 10th Social Science Solutions Economics Chapter 3 உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Text Book Back Questions and Answers
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
…………….. என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.
அ) உணவு கிடைத்தல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவின் முழு ஈடுபாடு
ஈ) இவை ஏதுமில்லை
விடை:
அ) உணவு கிடைத்தல்
Question 2.
தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
அ) FCI
ஆ) நுகர்வோர் கூட்டுறவு
இ) ICICI
ஈ) IFCI
விடை:
அ) FCI
Question 3.
எது சரியானது?
i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS – பொது விநியோக முறை
iv) FCI – இந்திய உணவுக் கழகம்
அ) i மற்றும் ii சரியானவை
ஆ) iii மற்றும் iv சரியானவை
இ) ii மற்றும் iii சரியானவை
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
Question 4.
நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சிங்கப்பூர்
ஈ) இங்கிலாந்து
விடை:
அ) அமெரிக்கா
Question 5.
…………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
அ) நீலப் புரட்சி
ஆ) வெள்ளைப் புரட்சி
இ) பசுமைப் புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
விடை:
இ பசுமைப் புரட்சி
Question 6.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………
அ) கேரளா
ஆ) ஆந்திரபிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா
விடை:
இ தமிழ்நாடு
Question 7.
………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
அ) ஆரோக்கியம்
ஆ) ஊட்டச்சத்து
இ) சுகாதாரம்
ஈ) பாதுகாப்பு
விடை:
ஆ) ஊட்டச்சத்து
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
…………… ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
விடை:
எடை குறைவாக இருப்பது
Question 2.
………………ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
விடை:
2013
Question 3.
பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் ……………… முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை:
நுகர்வோர் கூட்டுறவு
III. பின்வருவனவற்றைப் பொருத்துக .
விடை:
IV. சரியான கூற்றை தேர்வு செய்க.
Question 1.
கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
விடை:
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
V. குறுகிய விடையளிக்கவும்.
Question 1.
FAO வின்படி உணவு பாதுகாப்பை வரையறு.
விடை:
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவுப் பாதுகாப்பு இருக்கிறது.”
Question 2.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
விடை:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்: கிடைத்தல், அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
Question 3.
பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI)யின் பங்கு என்ன?
விடை:
- விவசாயிகளின் பயிர்களுக்கு விதைப்புப் பருவத்திற்கு முன்பே குறைந்தபட்ச விலை F(Minimum Support Price) யை ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
- உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது.
- கொள்முதல் செய்யப்பட்ட உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.
Question 4.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?
விடை:
- உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரித்தல்.
- உணவு தானியங்களை இறக்குமதி செய்வதில் குறைப்பு.
- அதிக மகசூல் தரக்கூடிய கோதுமை மற்றும் அரிசி கணிசமாக வளர்ந்தன.
- இது ஏராளமான வேலைகளை உருவாக்கியது.
Question 5.
தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
விடை:
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம்.
- ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
- பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்.
- பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம்.
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
- மதிய உணவுத் திட்டம்.
VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.
Question 1.
பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
விடை:
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியினை பின்பற்ற முடிவு செய்தது.
விவசாயத்தில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய பின்னர், தொழில்மயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது.
இருப்பினும், அப்பொழுது இருந்த அற்றிய செலாவணி இருப்பானது, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்.ை
பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது.
1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (P.L.480) திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு உதவி வழங்கியது.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கு சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது.
எனவே அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது,
இந்தத் திட்டம் நீர்ப்பாசனம் இருக்கும் இடத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு, பசுமைப் புரட்சியானது நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது.
Question 2.
குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
விடை:
குறைந்தபட்ச ஆதரவு நிலை:
- குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு ஒரு விலை, நிபுணர் குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது.
- குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும்,
- அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளைப் பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற்றால் திறந்தவெளி சந்தையில் விற்க இயலும்.
- மறுபுறம், திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் பெறுவார்கள்.
Question 3.
பொது விநியோக முறையை விவரிக்கவும்.
விடை:
- தமிழ்நாடு “உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
- உலகளாவிய பொது வழங்கல் முறையின் கீழ் குடும்ப வழங்கல் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
- இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு உரிமைகள் வழங்கப்படுகிறது.
- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் பொருள்களுக்கு மானியம் அளிக்கின்றன.
- மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கு இடையே வேறுபடுகிறது.
- தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது.
- 50% நகர்ப்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியதாகும்.
- குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பெறும் உரிமை உண்டு.
- தமிழ்நாடு தொடர்ந்து உலகளாவிய பொது வழங்கல் முறையைக் கொண்டுள்ளது மற்றும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
Question 4.
வாங்கும் திறனை பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள்:
அதிக மக்கள் தொகை :
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1000க்கு 1.7 ஆக உள்ளது.
அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். எனவே, இது குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்தல் :
- அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
- விலைகளின் தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி, ஏழை மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
பொருள்களுக்கான தேவை :
பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும் போது, பொருள்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
பொருள்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது:
விலை அதிகரிக்கும் போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது.
பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு:
- பொருள்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
- ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
வறுமை மற்றும் சமத்துவமின்மை :
- இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
- இது சமுதாயத்தில் வறுமை நிலையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
- வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் பொதுவாக வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
Question 5.
புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய குறிக்கோள்கள் யாவை?
விடை:
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு:
உள்ளீடுகளின் உற்பத்தித்திறனை உயர்த்துதல் :
இந்தியாவின் விவசாயக் கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.
ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டவை:
வேளாண் கொள்கையானது பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.
ஏழை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்தல் :
ஏழை விவசாயிகளுக்கு நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல், நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றம் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே விவசாயக் கொள்கையாகும்.
விவசாயத் துறையை நவீனமயமாக்குதல் :
விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள் போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துல் ஆகியவை அடங்கும்.
சுற்றுச்சூழல் சீரழிவு:
இந்தியாவின் விவசாயக் கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும் மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.
அதிகாரத்துவ தடைகளை நீக்குதல் :
- விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள் பற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது.
- இதனால் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.
10th Social Science Guide உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் ………….. வகைகளாக உள்ள ன.
அ) ஐந்து
ஆ) மூன்று .
இ) நான்கு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று
Question 2.
பல பரிமாண வறுமை குறியீடு ………………… ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அ) 2018
ஆ) 2010
இ) 2013
ஈ) 2016
விடை:
ஆ) 2010
Question 3.
புதிய விவசாயக் கொள்கை 2018ல் ………………. அரசால் அறிவிக்கப்பட்டது.
அ) மாநில
ஆ) மத்திய
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) மத்திய
Question 4.
வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் ……………. மிகப்பெரிய பொருளாதாரமாக மாறி, அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது.
அ) இந்தியா
ஆ) அமெரிக்கா
இ) சீனா
ஈ) ரஷ்யா
விடை:
இ சீனா
Question 5.
பொருள்களுக்கான தேவை அதிகரிக்க, பொருளின் விலையும் …………………
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மிக அதிகம்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அதிகரிக்கும்
Question 6.
…………….. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
அ) வறுமை
ஆ) சமத்துவமின்மை
இ) பொருளின் உற்பத்தி
ஈ) அதிக மக்கள் தொகை
விடை:
ஈ) அதிக மக்கள் தொகை
Question 7.
தொடர்ச்சியான உயர்வானது வாங்கும் சக்தியை சுரண்டி ……………….. மக்களை மோசமாகப் பாதிக்கிறது.
அ) கிராமப்புற
ஆ) நகர்புற
இ) ஏழை
ஈ) பணக்கார
விடை:
இ ஏழை
Question 8.
இந்தியாவில் ………………. அமைப்புகளில் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.
அ) நான்கு அடுக்கு
ஆ) மூன்று அடுக்கு
இ) எட்டு அடுக்கு
ஈ) இரண்டு அடுக்கு
விடை:
ஆ) மூன்று அடுக்கு
Question 9.
இந்திய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ……………….யை நம்பியுள்ளது.
அ) இறக்குமதி
ஆ) ஏற்றுமதி
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) இறக்குமதி
Question 10.
உணவு தானியங்களின் விளைச்சல் ……………. ஆக அதிகரித்துள்ளது.
அ) நான்கு மடங்கு
ஆ) எட்டு மடங்கு
இ) 20 மடங்கு
ஈ) 40 மடங்கு
விடை:
அ) நான்கு மடங்கு
Question 11.
………………. ஈட்டுதலுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்புடன் நெருக்கமாக உள்ளது.
அ) உணவை உறிஞ்சுதல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவு கிடைத்தல்
ஈ) ஆ) மற்றும் இ)
விடை:
ஆ) உணவுக்கான அணுகல்
Question 12.
மானியத்தின் நிலை மற்றும் அளவு ………………. இடையே வேறுபடுகிறது.
அ) மாவட்டம்
ஆ) நாடு
இ) மாநிலம்
ஈ) அ) மற்றும் இ)
விடை:
இ மாநிலம்
Question 13.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டில் ……………… ல் துவங்கப்பட்டது.
அ) நவம்பர் 1, 2016
ஆ) நவம்பர் 20, 2012
இ) அக்டோபர் 1, 2016
ஈ) நவம்பர் 1, 2010.
விடை:
அ) நவம்பர் 1, 2016
Question 14.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் …………… நகர்புற குடும்பங்களை கொண்டுள்ளது.
அ) 90%
ஆ) 40%
இ) 60%
ஈ) 50%
விடை:
ஈ) 50%
Question 15.
முதல் ஐந்து மாவட்டங்களில் …………….. உள்ளது.
அ) தருமபுரி
ஆ) அரியலூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) பெரம்பலூர்
விடை:
ஈ) கோயம்புத்தூர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் ………………….
விடை:
எம்.எஸ். சுவாமிநாதன்
Question 2.
……………… உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
விடை:
உணவினை உறிஞ்சுதல்
Question 3.
மக்களின் …………………….. ஒரு நாட்டின் மொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையது.
விடை:
உணவு பாதுகாப்பு
Question 4.
……………. உணவு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது.
விடை:
ஃபோர்டு அறக்கட்டளை
Question 5.
…………….. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது.
விடை:
தமிழ்நாடு
Question 6.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் குடும்பங்கள் ……………… என்று அழைக்கப்படுகிறது.
விடை:
முன்னுரிமை குடும்பங்கள்
Question 7.
……………… இந்திய பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏறத்தாழ்வு உள்ளது.
விடை:
வறுமை மற்றும் சமத்துவமின்மை
Question 8.
………………. என்பது வாங்கும் சக்தி தொடர்பான ஒரு கருத்தாகும்.
விடை:
வாங்கும் சக்தி சமநிலை
Question 9.
……………… வாங்கும் சக்தி சமநிலையில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
விடை:
இந்தியா
Question 10.
இந்தியாவின் விவசாய கொள்கை ………………. சரி செய்யும் மற்றொரு நோக்கமாகும்.
விடை:
சுற்றுச்சீரழிவை
Question 11.
பல பரிமாண வறுமை குறியீடு ஆனது ……………… மற்றும் ……………… ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.
விடை:
UNDP, OPHUI
Question 12.
வறுமைக் குறைப்பில் ……………. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
விடை:
தமிழகம்
Question 13.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் மற்றொரு குறியீடாக எடை ……………… உள்ளது.
விடை:
குறைவு
Question 14.
……………. நலவாழ்விலும் ஊட்டசத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:
மனித ஆரோக்கியத்திலும்
Question 15.
RCHP – ன் விரிவாக்கம் ………………………. ஆகும்.
விடை:
மதிய உணவு குழந்தைகள் சுகாதார திட்டங்கள்
Question 16.
………………. உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்று.
விடை:
ICDS
III. பின்வருவனவற்றைப் பொருத்துக.
விடை:
IV. சரியான கூற்றை தேர்வு செய்க.
Question 1.
கூற்று (A) : தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
காரணம் (R) : உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை திசிமி வாங்குகிறது.
அ) A சரி R தவறு
ஆ) A மற்றும் R இரண்டும் தவறு
இ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்கவில்லை .
ஈ) A சரி ஆனால் R ஆனது A வை விளக்குகிறது.
விடை:
அ) A சரி R தவறு
V. குறுகிய விடையளிக்கவும்.
Question 1.
உணவு கிடைத்தல் வரையறு.
விடை:
உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.
Question 2.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் யாவை?
விடை:
- மதிய உணவுத் திட்டம்
- குழந்தைகள் சுகாதர திட்டங்கள் (Reproductive and Child Health Programme)
- தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission)
Question 3.
வறுமையின் பல பரிமாணத்தின் இயல்புகள் யாவை?
விடை:
உடல், நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், வருமானம், அதிகாரமளித்தல், பணியின் தரம் மற்றும் வன்முறையினால் அச்சுறுத்தப்படுதல் போன்ற ஏழை மக்களின் அனுபவத்தை இழக்கும் பல காரணிகளால் பல பரிமாண வறுமை உருவாகிறது.
Question 4.
தாங்கியிருப்பு வரையறு.
விடை:
தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி, இந்திய உணவுத் கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
Question 5.
வாங்கும் திறன் வரையறு.
விடை:
- வாங்கும் திறன் என்பது ஒரு அலகு பணம் மூலம் வாங்கக் கூடிய பொருள்கள் அல்லது சேவைகளின் அளவின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் நாணயத்தின் மதிப்பு ஆகும்.
- விலை ஏறும் போது வாங்கும் திறன் குறைகிறது.
- விலை குறையும் போது வாங்கம் திறன் அதிகரிக்கிறது.
Question 6.
உணவினை உறிஞ்சுதல் வரையறு.
விடை:
உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.
Question 1.
உணவு பாதுகாப்பு பற்றி விவரிக்க.
விடை:
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு பாதுகாப்பினைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
“எல்லா மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல், சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையை கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவுத் தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆராக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது.”
பிரபல விவசாய விஞ்ஞானி முனைவர் எம்.எஸ். சுவாமிநாதனின் கருத்துப்படி, “சரிவிகித உணவு, பாதுகாப்பான குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் ஆரம்பக் கல்வி ஆகியவற்றிற்கான உடல், பொருளாதார மற்றும் சமூக அணுகல்” என்பது ஊட்டச்சத்து பாதுகாப்பாகும்.
உணவின் அடிப்படைக் கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள்:
உணவு கிடைத்தல், உணவு அணுகல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
1. உணவு கிடைத்தல் :
என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.
2. உணவுக்கான அணுகல் :
என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, இது ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.
3. உணவினை உறிஞ்சுதல் :
என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும். 2. தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்களை விவரி.
தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள்:
- டாக்டர் முத்துலெட்சமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் கீழ், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.
- முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்.
- தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் இலவசமாக ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை)
- பள்ளி சுகாதார திட்டம்’ விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.
- தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது.
The Complete Educational Website