Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)
Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 8.4 இராமானுசர் (நாடகம்)
கற்பவை கற்றபின்
Question 1.
கருத்துகளை உரைநடையாகப் படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும் நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மீனாட்சி, கயல்விழி, கண்ணன்.
மீனாட்சி : அனைவருக்கும் வணக்கம்! இன்றைய பொழுதில் அனைவரும் ஒன்றாய் உள்ளோம். இப்பொழுதை நல்லமுறையில் கழிக்க வேண்டும்.
கயல்விழி : நாம் இன்று கல்வி தொடர்பான செய்திகளைக் கலந்துரையாடலாமா?
மீனாட்சி : இராமானுசரைப்பற்றி கலந்துரையாடலாமா?
கயல்விழி : ஓ… கலந்துரையாடலாமே!
கண்ணன் : நாம் இன்று நாடகமாக இராமானுசரைப் பற்றிப் படித்தோம் அல்லவா…
மீனாட்சி : ஆம்! அதற்கென்ன…
கண்ணன் : உரைநடையைப் படிப்பதற்கும் நாடகத்தைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசுவோமா…
கயல்விழி : ஓ தாராளமாக… நானே தொடங்கி வைக்கிறேன். உரைநடை நீண்ட வாக்கிய அமைப்பு உடையதாக இருக்கும். எனவே படிப்பதற்குச் சலிப்பாக இருக்கும்.
மீனாட்சி : சரியாகச் சொன்னாய். நாடகமாகப் படிக்கும் போது கதைப்போக்கில் அமைந்து விடுகிறது.
கண்ணன் : கதைப்போக்கில் அமைவதால் படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கயல்விழி : உரையாடல் வடிவில் கருத்துகள் இருப்பதால் நேரில் பேசிக் கேட்பது போல் உள்ளது.
மீனாட்சி : கதைமாந்தர்கள் பெயர் நினைவுக்கு வரும்போதே அவர்கள் கூறும் கருத்தும் நினைவுக்கு வந்துவிடும்.
கயல்விழி : ஆம் மீனாட்சி. உரைநடையை நாம்தான் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.
கண்ணன் : ஆம் தோழிகளே! நம் கலந்துரையாடலில் இருந்து ஒரு கருத்தை உரைநடையில் படிப்பதை விட நாடக வடிவில் படிப்பதே எளிது என்பதை உணர்ந்து கொண்டோம் அல்லவா!
Question 2.
இந்நாடகம் வெளிப்படுத்துவது போன்று இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைத் தொகுத்து அவை குறித்த உங்களின் கருத்துகளை எடுத்துரைக்க.
Answer:
- • இராமானுசர் தினமும் ஆற்றில் குளிக்கப் போகுமுன் முதலியாண்டான் என்ற அந்தணச் சீடரின் கரம் பற்றி நீராடப் புகுவார்.
- நீராடி முடித்த பின் அந்தணர் அல்லா “உறங்காவில்லி தாசரின்’ கரம் பற்றி எழுவார்.
- இது வர்ணாசிரம் தருமத்துக்கு எதிரானது என்றும், பிராமணன் கீழ்க் குலத்தோனைத் தொடுவது தவறல்லவா?
- இது நீர் அறியாததா? இதற்கான காரணம் என்ன என்றனர் பிற சீடர்கள்.
இராமானுசர் பின்வருமாறு பதில் கூறினாராம்:
- எத்தனை தான் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
- எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
- “சாதியை ஒழிப்போம், ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
Answer:
மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.
காட்சி – 1
இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்.
குகன் : செழியா! வந்துவிட்டாயா.
செழியன் : வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்குச் செல்வோமா?
குகன் : செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசிரியரைச் சந்திக்க முடியவில்லை …
செழியன் : இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.
காட்சி – 2
இடம் : வகுப்பறை
பாத்திரங்கள் : ஆசிரியர், குகன், செழியன்.
மாணவர்கள் இருவரும் : வணக்கம் ஐயா!
ஆசிரியர் : வணக்கம்!
குகன் : ஐயா! உள்ளே வரலாமா?
ஆசிரியர் : வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.
செழியன் : ஐயா, வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே… அதற்காகத்தான் வந்தோம்.
ஆசிரியர் : நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணங்கள் கூறப்போகிறேன். முதலில் கொக்கைப் போல’ வாய்ப்பு கிட்டும் வரை கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான் வள்ளுவர், ‘கொக்கொக்க’ எனப் பாடியுள்ளார்.
குகன் : சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.
ஆசிரியர் : இரண்டாவதாக, கோழியைப் போல்!’
செழியன் : ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்….
ஆசிரியர் : கோழி, குப்பையைக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான ‘உணவை மட்டுமே’ கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களைக் கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்குத் தேவையான
நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
இருவரும் : நன்றாகப் புரிந்தது ஐயா!
ஆசிரியர் : மூன்றாவதாக, உப்பைப் போல….
குகன் : ஆம். ஐயா, ‘உப்பைப்போல’ என்பதன் விளக்கம் தாருங்கள்.
ஆசிரியர் : கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படியிருப்பினும், உங்களைச் சார்ந்தவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து அறிந்து நடந்து கொள்ள வேண்டும். மிக நெருங்கி இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பந்தான். உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால்தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும் : மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்.
நன்றி! ஐயா!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ………………..
அ) பிரம்மகமலம்
ஆ) சண்ப கம்
இ) குறிஞ்சி
ஈ) முல்லை
Answer:
அ) பிரம்மகமலம்
Question 2.
தண்டு கொடிக்கு இணையானவர்கள் யாவர்?
அ) பூரணர்
ஆ) கூரேசர்
இ) முதலியாண்டான், கூரேசர்
ஈ) இராமானுசர்
Answer:
இ) முதலியாண்டான், கூரேசர்
Question 3.
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………………..
அ) மூங்கில்
ஆ) குறிஞ்சி
இ) கமலம்
ஈ) செண்பகம்
Answer:
அ) மூங்கில்
Question 4.
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) ஆ மட்டும் சரியான கூற்று
இ) ஆ, இ இரண்டும் சரியானவை.
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Answer:
ஈ) கூற்று அ, ஆ இரண்டும் சரியானவை.
Question 5.
பூரணரின் மகன் பெயர் ………………………..
அ) நாராயணன்
ஆ) சௌம்ய நாராயணன்
இ) சௌம்ய ராஜன்
ஈ) முதலியாண்டான்
Answer:
ஆ) சௌம்ய நாராயணன்
Question 6.
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
அ) இராமானுசர்
ஆ) பூரணர்
இ) கூரேசர்
ஈ) முதலியாண்டான்
Answer:
அ) இராமானுசர்
Question 7.
சௌம்ய நாராயணன் யாரிடம் அடைக்கலப்படுத்தப்பட்டான்?
அ) முதலியாண்டானிடம்
ஆ) பூரணரிடம்
இ) இராமானுசரிடம்
ஈ) கூரேசரிடம்
Answer:
இ) இராமானுசரிடம்
Question 8.
பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து ………………………..
அ) திருமந்திரம்
ஆ) திருநீறு
இ) மந்திரம்
ஈ) துறவு
Answer:
அ) திருமந்திரம்
Question 9.
நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்பவர்………………………..
அ) திருமகள்
ஆ) மலைமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) திருமகள்
Question 10.
இளையாழ்வாரே! என்று பூரணர் யாரை அழைத்தார்?
அ) கூரேசரை
ஆ) முதலியாண்டானை
இ) இராமானுசரை
ஈ) பெரியவரை
Answer:
இ) இராமானுசரை
Question 11.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் மலரும் மலர்
அ) செண்பகம்
ஆ) குறிஞ்சி
இ) முல்லை
ஈ) பிரம்மகமலம்
Answer:
ஆ) குறிஞ்சி
Question 12.
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! – இப்பாடல் வரி எந்நூலில் இடம்பெற்றுள்ளது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) புறநானூறு
Question 13.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
அ) பழனி மலை
ஆ) பிரான் மலை
இ) பொதிகை மலை
ஈ) நல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை
நெடுவினா
Question 1.
இராமானுசர் நாடகம் மூலம் இராமானுசரின் பண்புகளைக் கூறுக.
Answer:
குறிப்புச் சட்டம்
- முன்னுரை
- பொறுமை உடையவர்
- நட்புக்கு மரியாதை
- தன்னலமற்ற பரந்த உள்ளம்
- முடிவுரை
முன்னுரை:
பிறர்நலம் போற்றுவதே மனித வாழ்வின் சிறந்த நிலை ஆகும். தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணுவோர் மத்தியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்ந்து காட்டிய இராமானுசரின் பண்புநலன்கள் பற்றிக் காண்போம்.
பொறுமை உடையவர்:
- திருமந்திரத் திருவருளைக் கற்றுக் கொள்வதற்காக பதினெட்டு முறை பூரணரைச் சந்திக்கச் சென்றார்.
- இன்றாவது நம் விருப்பம் நிறைவேறுமா! என்ற உடன்வந்தவர்களையும் பொறுமையுடன் வழி நடத்துகிறார்.
- உங்களை மட்டும்தானே வரச்சொன்னேன் என்ற பூரணரிடமும் பொறுமையுடன் பதில் கூறுகிறார்.
- இவ்வாறு இராமானுசர் பொறுமை என்னும் பண்பில் சிறந்திருத்தலை அறியலாம்.
நட்புக்கு மரியாதை:
- எப்பொழுதும் தன்னுடன் இருக்கும் கூரேசரையும், முதலியாண்டானையும் உண்மையான நட்புடன் நேசிக்கிறார். திருமந்திர
- திருவருளைக் கற்கப் போகும் பொழுதுகூட, பூரணர் தண்டு கொடியுடன் மட்டும் வாருங்கள் என்கிறார்.
- அப்போதும் இவர்கள் இருவரும் என்னுடன் இருக்கும் தண்டும் கொடியும் போன்றவர்கள்தான் என்று கூறி நட்பு உணர்வை வெளிப்படுத்துகிறார்.
தன்னலமற்ற பரந்த உள்ளம்:
- பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர்.
- குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.
- திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால் நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள் அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார்.
- அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப் பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த மகிழ்ச்சியைப் பெற்றார்.
- பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால் “எம் பெருமான்” என்று அழைக்கப் பெற்றார்.
- அது மட்டுமின்றி பூரணர் தன் மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார்.
- இவையே இராமானுசர் நாடகம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளும் தலைமைப் பாத்திரமான “இராமானுசரின் பண்புகள்” ஆகும்.
முடிவுரை:
தன்னலம் அகற்றி, பொதுநலம் போற்றுபவரே உண்மையான மகான்களாக முடியும் என்பதற்கு இராமானுசரே சான்றாக விளங்குகிறார் எனலாம்.
Question 2.
‘என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன்’ என்ற இராமானுசரின் கூற்றுக்கு
ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
குறிப்புச் சட்டம் ப்பச் சட்டம் –
- முன்னுரை
- அன்னை தெரசா
- விவேகானந்தர்
- அப்துல்கலாம்
- முடிவுரை
முன்னுரை:
நாளுக்கு ஒருமுறை மலர்வது செண்பகம். ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல் நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள். அவ்வாறு உதித்தவர்தான் இராமானுசர். அவர் தனக்கு மட்டுமே வீடுபேறு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் எல்லாருக்கும் நலம் கிட்ட வேண்டும் என்று எண்ணி, வாழ்ந்து காட்டிய அவரது வாழ்க்கை போற்றுத்தற்குரியது.
அன்னை தெரசா:
அயல்நாட்டுப் பெண்மணியாக இருந்தாலும், இந்திய நாட்டுக் குடிமகளாகவே வாழ்ந்தவர் அன்னை தெரசா. அவர் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கும், ஆதரவற்ற எளியோருக்கும் தனது களங்கமில்லாத சேவையால் பெருந்தொண்டாற்றினார்.
“காண்கின்ற மனிதர்களிடத்தில் அன்பு கூறாவிட்டால்
காணாத இறைவனிடத்தில் எப்படி அன்பு கூறுவாய்”
என்ற விவிலியத்தின் வார்த்தைகளைக் கொள்கையாகக் கொண்டு “உதவும் கரங்கள் ஜெபிக்கும் உதடுகளைவிட மேலானவை” என்று கூறி தன்னலமற்ற உதவிகளை அன்னை தெரசா செய்தமையால் ஒரு கவிஞர் தனது கவிதையில்,
“நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருப்பாய்…
கருணையுற்றதால் உலகத்திற்கே தாயாகிவிட்டாய்”
என்று எழுதினார்.
விவேகானந்தர்:
அயல்நாட்டிலும் ஆகச்சிறந்த ஆன்மீக உரையால் இந்தியப் பண்பாட்டை உலகறிய செய்த மகான் விவேகானந்தர்.
“எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத்
துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்’
என்று குறிப்பிடும் விவேகானந்தர்,
“சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு
வேலை செய்யுங்கள்”
என்கிறார்.
அப்துல்கலாம்:
தன்னலமற்ற தனிப்பெரும் தலைவராக வாழ்ந்து மறைந்தவர் அப்துல் கலாம்.
“நம்மை அனைவரும் நினைவு கூரும் வகையில்
ஒரு பெரும் செல்வத்தை நம் வருங்கால
சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும்
உரிமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது”
என்று குறிப்பிடும் கலாம், என்ன செய்வாய்’ என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்வி முறைதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தலைவர்களை உருவாக்கும்’ என தன்னலமற்றவர்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறார்.
முடிவுரை:
தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் மத்தியில் பிறரையும் வாழ வைப்பதற்கான நெறிமுறைகளை அளிப்பதாக பலரின் கூற்றுகளையும் சான்றாகக் கூறிட இயலும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் திருமூலரின் வாக்கினுக்கேற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் உலகில் அன்பே நிலைத்து நிற்கும். பரிதி முன் பனி காணாமல் போவதைப் போல் பகை இவ்வுலகைவிட்டு நீங்கிவிடும்.